என்ன வில்லத்தனம், எங்க 'தல'யை இப்படியா குறி வைப்பது: கம்பீரை திட்டிய டோணி ரசிகர்கள்
கொல்கத்தா: ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் கேப்டன் டோணியை விளையாட விடாமல் சீக்கிரம் அவுட்டாக்க கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டன் செய்த
செயலுக்கு பாராட்டும், திட்டும் கிடைத்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த டோணி தற்போது ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் ஐபிஎல் அணியின் கேப்டனாக உள்ளார். இந்த ஐபிஎல் சீசன் புனே அணிக்கு ராசியில்லை. அந்த அணி தோல்வி மேல் தோல்வியை சந்தித்து வருகிறது.
இருப்பினும் சென்னை அணியின் ஆதரவாளர்கள் தொடர்ந்து டோணிக்கு ஆதரவளித்து வருகிறார்கள் காரணம் தனி ஒருவனான டோணி.

கொல்கத்தா
புனே, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் நேற்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

டோணி
டோணி பேட்டிங் செய்ய வந்தவுடன் கொல்கத்தா அணியின் கேப்டன் கம்பீர் டோணியை சுற்றி கூடுதலாக 4 பேரை நிற்க வைத்தார். ரன்கள் எடுத்தே ஆக வேண்டும் என்ற நிலையில் அணி இருக்கும் போது பேட்டிங் செய்ய வந்தார் டோணி.

ரன்கள்
இக்கட்டான நிலையில் டோணி பந்தை லேசாக தட்டிவிட்டு குடு, குடுவென ஓடி, ஓடியே ரன்களை குவித்துவிடுவார். இதை தடுத்து டோணியை சீக்கிரம் அவுட்டாக்கவே கம்பீர் இப்படி ஒரு திட்டத்தை செயல்படுத்தினார். டோணி டென்ஷன் ஆவார் என்று கம்பீர் நினைத்தது தப்பாகிவிட்டது.

திட்டு
கம்பீரின் திட்டத்தால் டோணியால் பந்துகளை விளாச முடியவில்லை. இதற்காக சிலர் கம்பீரை பாராட்டினாலும் டோணியின் ரசிகர்கள் அவரை திட்டித் தீர்த்துள்ளனர். முன்னதாக கடந்த ஆண்டும் சென்னை அணிக்காக டோணி பேட்டிங் செய்ய வந்தபோதும் கம்பீர் இதேயே தான் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications