Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போட்டிகள்ல விளையாடாதபோது வீரர்களுக்கு குளிர்பானம் கொடுத்து உற்சாக படுத்தினேன்... சிறப்பான ஷிகர்!

புனே : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்றைய தினம் புனேவில் நடந்து முடிந்துள்ளது.

இந்த போட்டியில் 116 பந்துகளில் மட்டுமே விளையாடி 98 ரன்களை குவித்தார் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான். ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தான் போட்டிகளில் விளையாடாதபோது 12வது வீரராக செயல்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

ஒருநாள் போட்டி

ஒருநாள் போட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் நேற்றைய தினம் நடந்து முடிந்துள்ளது. இதில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது. இதற்கு முக்கிய காரணமாக துவக்க வீரர் ஷிகர் தவான் இருந்தார். அவர் 116 பந்துகளில் 98 ரன்களை அடித்து சதத்தை தவறவிட்டார்.

ஷிகர் தவானின் அதிரடி ஆட்டம்

ஷிகர் தவானின் அதிரடி ஆட்டம்

இந்த ரன்னில் 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸ்கள் அடக்கம். அடுத்தடுத்து ரோகித் சர்மா, விராட் கோலி என பார்ட்னர்ஷிப் அமைத்து ஷிகர் தவான் பந்துகளை தெறிக்க விட்டார். அவரது இந்த ஸ்கோர் அணியின் அபார வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

ஷிகருக்கு சிறப்பான நன்றி

ஷிகருக்கு சிறப்பான நன்றி

போட்டிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் விராட் கோலி, ஷிகர் தவானுக்கு சிறப்பான நன்றிகளை தெரிவித்துக் கொண்டார். அவர் போட்டிகளில் பங்கேற்காத நிலையில், வீரர்களுக்கு குளிர்பானம் கொடுப்பது, உற்சாகப்படுத்துவது என அவர் சிறப்பாக செயல்பட்டதாக குறிப்பிட்டார்.

ஷிகர் மகிழ்ச்சி

ஷிகர் மகிழ்ச்சி

இந்நிலையில் தான் போட்டிகளில் பங்கேற்காத சூழலில் 12வது வீரராக செயல்பட்டதாக ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். மேலும் கேஎல் ராகுல் மீண்டும் பார்மிற்கு திரும்பி அரைசதம் அடித்தது குறித்து ஷிகர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவரது ஆட்டத்தை அனைவரும் விருப்பத்துடன் பார்த்ததாகவும் குறிப்பிட்டார். கடந்த சில போட்டிகளில் சிறப்பாக விளையாடாவிட்டாலும் சாம்பியன் எப்போதுமே சாம்பியன்தான் என்பதை அவர் நிரூபித்துள்ளதாகவும் ஷிகர் குறிப்பிட்டார்.

Story first published: Wednesday, March 24, 2021, 12:47 [IST]
Other articles published on Mar 24, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+