ஆமா நீங்க யாரு?.. கோஹ்லிக்கு "டரியல்" கொடுத்த இலங்கைப் பெண்!
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஹோட்டலுக்குச் சாப்பிடச் சென்ற இலங்கைப் பெண் ஒருவர், விராத் கோஹ்லியைப் பார்த்து ஆமா நீங்க யாரு, உங்க கூட எதுக்கு நான் போட்டோ எடுக்க வேண்டும் என்று கேட்டு அவரை டரியல் ஆக்கியுள்ளார்.
அத்தோடு நில்லாத அப்பெண், அந்த இந்தியர் (கோஹ்லி தாங்க) என்னை டீஸ் செய்கிறார் என்றும் ஹோட்டல் மேனேஜரிடம் புகார் கொடுத்து கோஹ்லியை மேலும் குழப்பியடித்துள்ளார்.
இலங்கைத் தமிழ்த் தளங்களில் இதுகுறித்த செய்தி வெளியாகியுள்ளது. இந்த விவரத்தை அப்பெண்ணின் கணவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா டூர்
ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு நாள் மற்றும் டுவென்டி 20 டூரில் கோஹ்லி கலந்து கொண்டு ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

மெல்போர்ன் குழப்பம்
இந்த நிலையில் மெல்போர்ன் நகரில் அவர் சாப்பிடுவதற்காக அணி மேலாளருடன் போயிருந்தபோதுதான் இந்த சுவாரஸ்ய குழப்பம் ஏற்பட்டது.

தர்ஷிகா
அந்தப் பெண்ணின் பெயர் தர்ஷிகா (முழுப் பெயர் தெரியவில்லை.. தமிழ்ப் பெண் போலத் தெரிகிறது). கணவருடன் ஹோட்டலுக்குச் சாப்பிட வந்துள்ளார்.

நடந்தது என்ன...?
அந்த சமயத்தில் கோஹ்லி தனது மேனேஜருடன் அங்கு வந்துள்ளார். அப்போது நடந்தது குறித்து தர்ஷிகாவின் கணவர் கூறியுள்ளதாவது...

இப்ப கிடையாது
கோஹ்லி மேனேஜர் - இப்போது கிடையாது
என் மனைவி- எது இப்ப கிடையாது?

போட்டோ போட்டோ
கோஹ்லி மேனேஜர் - போட்டோக்கள் இப்போது கிடையாது
மனைவி - போட்டோவா.. யாருடன்?

அது வேற ஒன்னுமில்லைங்க
கோஹ்லி - அது இல்லை. நீங்க என்னுடன் போட்டோ எடுத்துக் கொள்ள விரும்புகிறீர்களோ என அவர் நினைத்து விட்டார்.
மனைவி - நான் ஏன் உங்களுடன் போட்டோ எடுக்க வேண்டும். (கோஹ்லி முகத்தில் ஷாக்).. நீங்க யாரு.?

நீங்க என்ன அவ்ளோ பெரிய...!
மனைவி - நீங்க யாரு.. அவ்வளவு பிரபலமானவரா..?
கோஹ்லியும், அவரது மேலாளரும் இதைக் கேட்டு மேலும் ஷாக்காகி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனராம்.

ஹராஸ் செய்கிறார்கள்
அத்தோடு நிற்காத அப்பெண் ஹோட்டல் மேலாளரை அணுகி அந்த இந்தியர் என்னை ஹராஸ் செய்கிறார் என்றும் புகார் கூறியுள்ளார். இப்படிப் போகிறது அந்த பேஸ்புக் பதிவு... இதை பல்வேறு இலங்கை இணையதளங்கள் செய்தியாக போட்டுள்ளன.


Click it and Unblock the Notifications