சச்சின் பற்றி ஒரு கதை சொல்லட்டா சார்.. மெக்கிராத்தின் கலகல!
மும்பை : சச்சின் பொதுவாக களத்தில் சாதுவானவர். பேட்டிங் மூலம் மட்டுமே எதிரணிக்கு பதில் சொல்வார். தேவையற்ற பேச்சுகளில் ஈடுபடமாட்டார்.
ஆனால், அவரும் ஒருநாள் களத்தில் ஒரு பந்துவீச்சாளரை சீண்டியுள்ளார். அந்த பந்துவீச்சாளர் ஆஸ்திரேலியாவின் சாதனையாளர் மெக்கிராத் தான். அந்த சம்பவத்தை பற்றி மெக்கிராத்தே கூறுகிறார்.

அது சாம்பியன்ஸ் ட்ராபி 2000தில் நடந்தது. நான் சச்சினுக்கு ஷார்ட் பால் வீசினேன். சச்சின் அதை இழுத்து அடித்தார். பந்து மேலே சென்றது. நான் விக்கெட் கீப்பர் பிடித்து விடுவர் என நினைத்தேன். அவரை தாண்டி சென்றது,
பின் தேர்ட்மென் திசையில் இருந்த வீரர் ஓடி வந்து பிடிப்பார் என நினைத்தேன். ஆனால், அவரையும் தாண்டி சென்ற பந்து சிக்ஸர் ஆனது. அதன் பின் சச்சின் என் பந்தை அடித்து துவைத்தார். சில சமயம் என்னிடம் வந்து பேசினார். என் மீது உரசினார். என்னை சீண்டினார்.
இதற்கு முன் இப்படி நடந்ததில்லை. அது மிகவும் அந்நியமாக இருந்தது. அது சச்சினின் நாள். அவர் உறுதியாக இருந்தார். அதை எனக்கு உணர்த்தினார். இப்படி கூறியுள்ளார் மெக்கிராத்.
சச்சினுக்கும் உணர்ச்சிகள் இருக்கத்தானே செய்யும். ஆனால், இந்த சம்பவத்துக்கு முன்போ, பின்போ அவர் அப்படி செய்ததாக நினைவில்லை.


Click it and Unblock the Notifications