Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என் கிட்ட மோதாதே.. சாக்ஷி மாலிக்கைக் கலாய்த்த வீரேந்திர ஷேவாக்!

டெல்லி: தன்னை சந்திக்க விரும்பி டிவிட்டர் மூலம் டைம் கேட்ட ஒலிம்பிக் வெண்கல ராணி சாக்ஷி மாலிக்குக்குப் பதிலளித்த வீரேந்திர ஷேவாக், நான் ரெடி. ஆனால் சந்திக்கும்போது என்னுடன் மல்யுத்தத்தில் மட்டும் இறங்கி விடக் கூடாது என்று சாக்ஷியைக் கலாய்த்துள்ளார்.

When Virender Sehwag urged Sakshi Malik not to wrestle with him

ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்தவர் சாக்ஷிதான். அவர்தான் முதலில் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். அடுத்துதான் பிவி சிந்து வெள்ளியைத் தட்டி வந்தார்.


இந்த நிலையில் சாக்ஷி மாலிக்குக்கு வாழ்த்து கூறியிருந்தார் ஷேுவாக். அதற்கு நன்றி தெரிவித்துள்ள சாக்ஷி, தான் ஷேவாக்கைச் சந்திக்க ஆர்வமாக இருப்பதாகவும், டைம் கொடுக்கும்படியும் கோரி டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதற்கு ஷேவாக் பதிலளித்துள்ளார். அதில் தனது ஸ்டைலில் அவர் சாக்ஷியைக் கலாய்த்திருந்தார். அதில், சாக்ஷி, கண்டிப்பாக சந்திக்கலாம். நேரத்தை விரைவில் சொல்கிறேன். சந்திக்கும்போது என்னுடன் மல்யுத்தம் செய்ய மாட்டீர்கள் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார் ஷேவாக்.

இதேபோல முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்துவுக்கும் டிவிட்டர் மூலம் டைம் கேட்டுள்ளா சாக்ஷி மாலிக். ஆனால் இதுவரை சித்துவிடமிருந்து பதில் வரவில்லை.

Story first published: Thursday, August 25, 2016, 17:08 [IST]
Other articles published on Aug 25, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+