Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பைக்கான இந்திய அணி.. அறிவிப்பு எப்போது ? 2 வீரர்களின் மெடிக்கல் ரிப்போர்ட் என்னாச்சு ?

மும்பை: டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணிகளை தேர்வு செய்ய செப்டம்பர் 15ஆம் தேதியே கடைசி நாள் என்று ஐசிசி கெடு விதித்துள்ளது.

இந்த நிலையில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா இன்னும் அதற்கான பணிகளை மேற்கொள்ளவில்லை.

இந்திய அணியின் தேர்வு செய்யும் பணிக்கு தாமதம் என்ன ? அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பது குறித்து தற்போது காணலாம்.

தேர்வுக்குழு கூட்டம்

தேர்வுக்குழு கூட்டம்

ஆசிய கோப்பை போட்டிகள் நடைபெறுவதால், அந்த தொடர் முடிந்தவுடன் தேர்வுக் குழு கூட்டம் கூடி, அணியை தேர்வு செய்யும் பணியை நடத்தலாம் என்று பிசிசிஐ முடிவு எடுத்தது. ஆனால், இந்தியா ஆசிய கோப்பை தொடரிலிருந்து முன்பே வெளியேறிவிட்ட நிலையில், முன்கூட்டியே அணியை அறிவிக்கும் முடிவை பிசிசிஐ எடுத்துள்ளது.

ஹர்சல் பட்டேல்

ஹர்சல் பட்டேல்

ஆனால், இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது 4 வீரர்கள் காயம் காரணமாக ஓய்வில் உள்ளனர். இதில் 3 வீரர்கள் மிக முக்கியமானவர்கள். பும்ரா மற்றும் ஹர்சல் பட்டேல் ஆகியோர் காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் விளையாடவில்லை. இதில் ஹர்சல் பட்டேல் தற்போது முழு உடல் தகுதியை எட்டும் தருவாயில் உள்ளார்.

பும்ரா

பும்ரா

இதனால் அவர் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் பங்கேற்பதுஉறுதியாகிவிட்டது. ஆனால் பும்ராவுக்கு இன்னும் ஒரு வாரத்தில் அவருடைய காயம் தொடர்பான மருத்துவக் குழுவை வைத்து ஆய்வு நடத்தப்படும். இதில் மருத்துவக்குழு தரும் அறிக்கையின் படியே பும்ரா உலகக் கோப்பையில் இடம்பெறுவது குறித்து தெரியவரும்.

எப்போது அறிவிப்பு

எப்போது அறிவிப்பு

இதே போன்று ஜடேஜாவும் தற்போது அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதன் காரணமாக அவருடைய மருத்துவ அறிக்கைக்காகவும் பிசிசிஐ காத்துள்ளது. இளம் வேகப்பந்துவீச்சாளர் ஆவேஷ் கானும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து டிராவிட் மற்றும் ரோகித் சர்மாவுடன் இணைந்து தேர்வுக்குழு வரும் ஞாயிற்றுகிழமைக்குள் அணியை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, September 8, 2022, 20:20 [IST]
Other articles published on Sep 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+