Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வைபவ் சூர்யவன்ஷி ஆடும் அடுத்த போட்டி எப்போது? இந்திய அணியின் பிளேயிங் 11இல் இடம் கிடைக்குமா?

மும்பை: இங்கிலாந்து தொடரில் அறிமுகமாகி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அடுத்து எப்போது இந்திய அணியில் இடம் பெற்று சர்வதேச போட்டிகளில் விளையாடப் போகிறார்? என்று பார்க்கலாம்.

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் விரைவில் தொடங்க உள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி இடம் பெற்றுள்ளார். அவருக்கு பிளேயிங் 11-இல் நிச்சயமாக வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

When will Vaibhav Suryavanshi play his next match Will he get a spot in India s Playing 11 vs Zimbabwe

இந்தத் தொடரின் முதல் போட்டி வரும் ஜூலை 23 அன்று ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறுகிறது. அடுத்த இரண்டு போட்டிகள் ஜூலை 25 மற்றும் 26 ஆகிய தேதிகளிலும் அதே மைதானத்தில் நடைபெற உள்ளன. தற்காலிக பயிற்சியாளர் வி.வி.எஸ்.லக்ஷ்மனின் கீழ் விளையாட உள்ள இந்திய அணி ஏற்கனவே ஜிம்பாப்வே சென்றடைந்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான அறிமுக தொடரில் 3 போட்டிகளில் வெறும் 42 ரன்கள் (14, 13, 15) மட்டுமே எடுத்து வைபவ் சூர்யவன்ஷி ஏமாற்றமளித்தார். இதனால் கடைசி போட்டியில் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் விளையாடினார். ஆனால், தற்போது நடைபெற உள்ள ஜிம்பாப்வே தொடரில் சஞ்சு சாம்சனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

அதனால், அபிஷேக் சர்மாவுடன் இணைந்து வைபவ் சூர்யவன்ஷி மீண்டும் தொடக்க வீரராக களம் இறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதன் மூலம் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அவருக்கு நிச்சயம் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ஜிம்பாப்வே மண்ணில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் வைபவ் சூர்யவன்ஷி தொடர் நாயகன் விருது வென்றதுடன், இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் 175 ரன்கள் குவித்து அசாத்திய ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எனவே, இந்த முறை ஜிம்பாப்வே டி20 தொடரில் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக ரன் குவிப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

“வெறும் இளம் வீரர்களை மட்டும் வைத்து ஜெயிக்க முடியாது அதனால்..”.. கம்பீருக்கு யுவராஜ் சிங் அட்வைஸ்

“வெறும் இளம் வீரர்களை மட்டும் வைத்து ஜெயிக்க முடியாது அதனால்..”.. கம்பீருக்கு யுவராஜ் சிங் அட்வைஸ்

ஜிம்பாப்வே தொடருக்கான இந்தியாவின் உத்தேச பிளேயிங் லெவன்:

அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா, சூர்யான்ஷ் ஷெட்கே, ரிங்கு சிங், ஹர்ஷ் துபே, வருண் சக்கரவர்த்தி, மயங்க் யாதவ், அசோக் சர்மா.

"சத்தம் இல்லேன்னா சுவாரஸ்யம் இருக்காது.. இவங்க பேசுவதை கண்டுக்க மாட்டேன்".. ரோஹித் சர்மா ஓபன் டாக்
Story first published: Monday, July 20, 2026, 13:42 [IST]
Other articles published on Jul 20, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+