Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த 'ஸ்பெஷல் நபருக்காக' உலகக் கோப்பையை வென்ற யுவராஜ்

டெல்லி: 2011ம் ஆண்டு இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றது. அந்த போட்டிகளில் இந்திய வீரர் ஒருவர் ஸ்பெஷலான நபர் ஒருவருக்காக விளையாடினார். மேலும் அந்த வீரர் இந்தியா கோப்பையை வெல்ல காரணமாக இருந்தார். நான்கு ஆண்டுகள் கழித்து அந்த வீரர் மீண்டும் உலகக் கோப்பை போட்டியில் விளையாட தேர்வு செய்யப்பட்டவில்லை. அவர் யாருக்காக விளையாடினாரோ அந்த ஸ்பெஷல் நபர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.

அந்த வீரர் மற்றும் ஸ்பெஷல் நபர் யார் என்று தெரிகிறதா?

யுவராஜ்

யுவராஜ்

அந்த வீரர் யுவராஜ் சிங். அவர் கடந்த உலகக் கோப்பை தொடரை ஒரு ஸ்பெஷலான நபருக்காக விளையாடியதாக கோப்பையை வென்ற பிறகு அறிவித்தார். அந்த ஸ்பெஷலான நபர் வேறு யாரும் இல்லை சச்சின் டெண்டுல்கர் தான்.

அணியில் இல்லை

அணியில் இல்லை

கடந்த முறை உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய யுவராஜ் வயது, ரன்கள் எடுக்காமல் இருப்பதால் தற்போதைய உலகக் கோப்பை அணியில் இடம்பெறவில்லை.

டெண்டுல்கர்

டெண்டுல்கர்

உலகக் கோப்பையை வென்ற பிறகு டெண்டுல்கர் 2012ம் ஆண்டின் துவக்கம் வரை சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடினார். அதன் பிறகு அந்த ஆண்டு இறுதியில் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர் ஓராண்டு காலம் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவிட்டு கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்றார்.

உதவி

உதவி

உலக கிரிக்கெட் வீரர்களில் பலர் போன்று யுவராஜுக்கும் டெண்டுல்கர் தான் முன்மாதிரி. மைதானத்தில் விளையாடும்போது எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் யுவராஜ் சச்சின் உதவியை தான் நாடி வந்தார்.

யுவி

யுவி

2011ம் ஆண்டு அகமதாபாத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடி வெற்றி பெற்ற பிறகே தான் ஒரு ஸ்பெஷலான நபருக்காக இந்த போட்டிகளில் விளையாடுவதாக யுவராஜ் அறிவித்தார். அந்த நபர் யார் என்பதை இறுதிப் போட்டி அன்று அறிவிப்பேன் என்றார். அதன்படி ஏப்ரல் 2ம் தேதி நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற பிறகு அந்த ஸ்பெஷலான நபரின் பெயரை யுவராஜ் அறிவித்தார்.

காதலி இல்லை

காதலி இல்லை

கோப்பையை வென்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய யுவராஜ் கூறுகையில், மன்னித்துவிடுங்கள். நான் இந்த போட்டியை என் காதலிக்காக விளையாடவில்லை, சச்சின் டெண்டுல்கருக்காக விளையாடினேன் என்றார்.

தொடர் நாயகன்

தொடர் நாயகன்

உலகக் கோப்பை போட்டிகளில் 369 ரன்கள் எடுத்து, 15 விக்கெட்டுகளை கைப்பற்றிய யுவராஜ் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போதைய உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் யுவராஜ் இல்லாதது அவரது ரசிகர்களை கவலை அடைய வைத்துள்ளது. இந்தியா இம்முறை சச்சின் இல்லாமல் உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட உள்ளது.

Story first published: Tuesday, February 3, 2015, 10:41 [IST]
Other articles published on Feb 3, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+