Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விடுமுறைக்கு எதுக்குங்க வெளிநாட்டுக்கு போகணும்... நம்ம நாட்டுலயே எவ்ளோ இடங்கள் இருக்கு!

துபாய் : யூஏஇயில் இருந்தபோது ரசிகர்களுடன் கலந்துரையாடிய தோனி பல்வேறு விஷயங்களை பகிர்ந்தார்.

அப்போது அவர் செல்ல விரும்பும் சுற்றுலா தளம் குறித்த ரசிகர் ஒருவரின் கேள்விக்கு தோனி பதிலளித்தார்.

இந்தியாவிலேயே அதிகமான பகுதிகள் சிறப்பாக உள்ளதாகவும் வெளிநாடுகளுக்கு செல்வதை காட்டிலும் இந்தியாவின் மலைபிரதேசங்களுக்கு செல்வதை விரும்புவதாகவும் தோனி தெரிவித்துள்ளார்.

விடுமுறை செல்ல விரும்பும் இடம்

விடுமுறை செல்ல விரும்பும் இடம்

ஐபிஎல் போட்டிகளின் இடையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி பதிலளித்த வீடியோ பதிவை தற்போது தனது யூடியூப் பக்கத்தில் சிஎஸ்கே வெளியிட்டுள்ளது. அதில் ரசிகர் ஒருவர் போட்டிகளை தவிர்த்துவிட்டு விடுமுறைக்கு சுற்றுலா செல்ல வேண்டுமென்றால் எங்கு செல்ல விருப்பப்படுவீர்கள் என்று கேட்டிருந்தார்.

பனிப்பொழிவை ரசித்த தோனி

பனிப்பொழிவை ரசித்த தோனி

அதற்கு பதிலளித்த தோனி, இந்தியாவின் மலைபிரதேசங்களுக்கு செல்லவே தான் விரும்புதாக தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு முசோரிக்கு அருகிலுள்ள மலைபிரதேசம் ஒன்றிற்கு அவர் குடும்பத்தினருடன் சென்றிருந்தார். அங்கு முதல்முறையாக பனிப்பொழிவை கண்டு தான் மிகவும் என்ஜாய் செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளின் தேவை இல்லை

வெளிநாடுகளின் தேவை இல்லை

அதனால் இந்தியாவில் உள்ள மலைப்பிரதேசங்களுக்கு செல்வதே தன்னுடைய முதல் சாய்ஸ் என்று தோனி தெரிவித்துள்ளார். நமமுடைய நாட்டிலேயே சிறப்பான பல இடங்கள் உள்ளதாகவும், அதனால் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய தேவை இல்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

பிளே-ஆப்பிற்கு தகுதி பெறாத சிஎஸ்கே

பிளே-ஆப்பிற்கு தகுதி பெறாத சிஎஸ்கே

மேலும் இந்த கேள்வி மிகவும் சிறப்பான கேள்வி என்றும் அவர் பாராட்டு தெரிவித்தார். சர்வதேச போட்டிகளில் இருந்து கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி ஓய்வு அறிவித்துள்ள தோனி, ஐபிஎல்லின் பிளே-ஆப் சுற்றிலிருந்து சிஎஸ்கே வெளியேறியுள்ள நிலையில், நாடு திரும்பியுள்ளார். அடுத்த ஆண்டு மிகவும் வலிமையாக மீண்டும் வருவோம் என்று சிஎஸ்கேவின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, November 6, 2020, 15:25 [IST]
Other articles published on Nov 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+