For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி கிடையாது ! இறுதி போட்டியில் அதிக வெற்றிகளை பெற்ற இந்திய அணி கேப்டன் யார் தெரியுமா?

மும்பை : ஐசிசி கிரிக்கெட் தொடர்களில் இந்திய அணி இறுதிப் போட்டி வரை வென்று கடந்த 10 ஆண்டுகளாக ஒரு முறை கூட வெற்றி பெற்றதில்லை. லீக் சுற்று அரையிறுதி போன்ற தொடர்களில் எல்லாம் சிறப்பாக விளையாடும் இந்திய அணி இறுதிப் போட்டிகளில் காலம் காலமாக தோற்றுவிடுகிறது.

அதுவும் 2015 உலகக் கோப்பை, 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை, 2022 டி20 உலக கோப்பை ஆகிய தொடர்களில் எல்லாம் அரை இறுதிச்சுற்றில், இந்திய அணி கட்டியது.

Which indian captain won most number of finals in 3 Plus odi team tournament

இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் பொருத்தவரை மூன்று அணிகள் மற்றும் அதற்கு மேல் பங்கு பெற்ற தொடர்களின் இறுதிப் போட்டியில் எந்த கேப்டன் தலைமையில் இந்திய அணி அதிக வெற்றியை பெற்று இருக்கிறது என்று தற்போது பார்க்கலாம். நாம் தோனி தான் மூன்று ஐசிசி கோப்பையை வென்று தந்ததாக பாராட்டி வருகிறோம். ஆனால் தோனியை விட அதிக இறுதிப்போட்டியில் இந்தியாவை வெற்றி பெற வைத்த கேப்டன் ஒருவர் இருக்கிறார். அவர் யார் என்று தற்போது பார்க்கலாம்.

அது இந்திய அணியின் ஜாம்பவனான முஹம்மது அசாருதீன் தான். 1991லிருந்து 99 வரை 8 ஆண்டுகள் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார். அதில் 19 இறுதிப் போட்டியில் இந்தியாவை விளையாட வைத்து 11 வெற்றி பெற்று எட்டில் தோல்வியை தழுவி இருக்கிறார்.இதில் அவருடைய வெற்றி சதவீதம் 72.73 . இரண்டாவது இடத்தில் தான் தோனி இருக்கிறார். 2008 முதல் 2013 ஆம் ஆண்டு வரை கேப்டனாக இருந்து 11 போட்டிகளில் இந்தியாவை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வைத்திருக்கிறார்.

இதில் 7 போட்டியில் இந்தியா வெற்றியும் நான்கு போட்டியில் தோல்வியும் தழுவி இருக்கிறது. தோனியின் வெற்றி சதவீதம் 63.64 என்ற அளவில் இருக்கிறது. இந்தப் பட்டியலில் ரோகித் சர்மா மூன்றாவது இடத்தில் இருக்கிறார். ரோஹித் மூன்று முறை இதுவரை இறுதிப் போட்டிக்கு இந்தியாவை தகுதி பெற வைத்து, அதில் இரண்டில் வெற்றி பெற்று ஒன்றில் மட்டுமே தோல்வியை தழுவி இருக்கிறார். ரோகித் சர்மாவின் வெற்றியின் சதவீதம் 66.66 என்று அளவில் இருக்கிறது.

இது தோனியை விட அதிகமாகும். இதேபோன்று சச்சின் டெண்டுல்கர் கேப்டனாக இருந்தபோது இந்திய அணி 6 இறுதிப் போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றி மூன்றில் தோல்வி என 25 வெற்றி சதவீதத்துடன் இருக்கிறார். கங்குலி தலைமையில் இந்திய அணி 14 இறுதிப் போட்டிகளில் விளையாடி இருக்கிறது. இதில் ஒரே ஒன்றில் மட்டும் தான் இந்தியா வெற்றி பெற்று இருக்கிறது.

10 போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது. கங்குலியின் இறுதிப்போட்டி வெற்றி சதவீதம் 9.9 என்ற அளவில் இருக்கிறது. இதேபோன்று டிராவிட், அஜய் ஜடேஜா, விராட் கோலி ஆகியோர் இறுதிப் போட்டிகளுக்கு பலமுறை சென்று இருந்தும் இந்திய அணி அதில் ஒரு முறை கூட வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, November 22, 2023, 22:26 [IST]
Other articles published on Nov 22, 2023
English summary
Which indian captain won most number of finals in 3 Plus odi team tournament தோனி கிடையாது ! இறுதி போட்டியில் அதிக வெற்றிகளை பெற்ற இந்திய அணி கேப்டன் யார் தெரியுமா?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+