Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய அணி எது? இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?

மும்பை : இந்தியா தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் கிரிக்கெட் சீசனை முன்னிட்டு பல்வேறு ரெக்கார்டுகளை எந்த அணி படைத்திருக்கிறது என்பதை தற்போது நாம் பார்க்கலாம். டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் சதம் அடித்தால் அதை ஒரு பெரிய சாதனையாக கிரிக்கெட் ரசிகர்கள் கூறுவார்கள்.

அப்படி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர் என்றால் அது சச்சின் டெண்டுல்கர் தான். சச்சின் தற்போது 51 சதம் அடித்திருக்கிறார். சச்சினின் இந்த சதம் ரெக்கார்டை யார் முறியடிக்க போகிறார்கள் என்று கேள்வி நீண்ட காலமாக எழுந்து வருகிறது.

india vs bangladesh ind vs ban cricket virat kohli

இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எந்த அணி அதிக சதம் அடித்து இருக்கிறது என்பதை தற்போது காண இருக்கின்றோம். இந்த பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்திருப்பது ஜிம்பாப்வே. ஜிம்பாவே அணி வீரர்கள் இதுவரை 64 முறை சதம் அடித்திருக்கிறார்கள். அதிகபட்சமாக ஆண்டி பிளவர் 12 சதம் அடித்திருக்கிறார்.

இந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்தை வங்கதேசம் அணி பிடித்திருக்கிறது. வங்கதேசம் அணி வீரர்கள் இதுவரை 80 முறை சதம் அடித்து இருக்கிறார்கள். இதில் அதிகபட்சமாக மோமினுள் ஹக் 12 சதம் அடித்திருக்கிறார். இந்த பட்டியலில் எட்டாவது இடத்தை இலங்கை பெற்று இருக்கிறது. இலங்கை வீரர்கள் 32 முறை சதம் அடித்திருக்கிறார்கள். இது அதிகபட்சமாக சங்ககாரா 38 சதம் அடித்திருக்கிறார்.

இந்த பட்டியலில் ஏழாவது இடத்தில் நியூசிலாந்து பிடித்திருக்கிறது. நியூசிலாந்த அணி வீரர்கள் 331 முறை சதம் அடித்திருக்கிறார்கள். இதில் வில்லியம்சன் அதிகபட்சமாக 32 சதம் அடித்திருக்கிறார். இந்த பட்டியலில் ஆறாவது இடத்தை தென் ஆப்ரிக்கா பிடித்திருக்கிறது. தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் 392 முறை சதம் அடித்திருக்கிறார்கள். இதில் அதிகபட்சமாக தென்னாப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் 45 முறை சதம் அடித்திருக்கிறார்.

இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் பாகிஸ்தான் இருக்கிறது. பாகிஸ்தான் வீரர்கள் இதுவரை 422 முறை சதம் அடித்திருக்கிறார்கள். இதில் யூனிஸ்கான் அதிகபட்சமாக 34 சதம் அடித்திருக்கிறார். இந்த பட்டியலில் நான்காம் இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் 501 முறை சதம் அடித்திருக்கிறார்கள். இதில் அதிகபட்சமாக பிரைன் லாரா 34 சதம் அடித்திருக்கிறார்.

இந்த பட்டியலில் இந்திய அணி மூன்றாம் இடத்தை பிடித்திருக்கிறது. இதில் இந்திய வீரர்கள் 546 முறை சதம் அடித்திருக்கிறது. இதில் சச்சின் டெண்டுல்கர் அதிகபட்சமாக 51 சதம் அடித்திருக்கிறது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியா இருக்கிறது. ஆஸ்திரேலியா வீரர்கள் இதுவரை 892 முறை சதம் அடித்திருக்கிறார்கள். இதில் அதிகபட்சமாக ரிக்கி பாண்டிங் 41சதம் அடித்துள்ளார். இந்த பட்டியலில் முதலிடத்தில் இங்கிலாந்து இருக்கிறது. இங்கிலாந்து வீரர்கள் 918 முறை இதுவரை சதம் அடித்திருக்கிறார்கள்.

இதில் ஜோ ரூட் ஆகியோர் தலா 33 முறை சதம் அடித்துள்ளனர். ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் எட்ட முடியாத அளவுக்கு இருப்பதற்கு காரணம் கிரிக்கெட் ஆரம்பத்திலிருந்து இந்த இரு அணிகளும் பல ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி இருக்கிறது. ஆனால் இந்தியா வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் போன்ற அணிகள் எல்லாம் கிரிக்கெட்டில் அப்போது பெரிய அளவில் சாதித்தது கிடையாது.

Story first published: Monday, September 16, 2024, 18:24 [IST]
Other articles published on Sep 16, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+