ஈடன் கார்டனில் கங்குலியைப் பார்த்து 'யார் நீங்கள்?'என்று கேட்ட ஐசிசி அதிகாரி

கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி கடந்த செவ்வாய்கிழமை கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டியின் வர்ணனையாளராக இருந்தார். அப்போது அவர் ஆட்டம் துவங்கும் முன்பு பிட்ச் அறிக்கை அளிக்க மைதானத்திற்குள் சென்றார். அவர் சற்றும் எதிர்பாரா விதமாக ஐசிசியின் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரி தர்மேந்தர் சிங் யாதவ் என்பவர் அவரை தடுத்து நிறுத்தினார்.
அதோடு மட்டுமல்லாமல் கங்குலியைப் பார்த்து யார் நீங்கள்? என்று கேட்டார் யாதவ். என்னடா என் சொந்த மண்ணிலே என்னைப் பார்த்து யார் என்று கேட்கிறாரே என்று நினைத்த அவர் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் நான் தான் சவுரவ் கங்குலி என்று கூறியிருக்கிறார். ஆனால் யாதவ் அதை ஏற்றுக் கொள்ளாமல் உங்கள் அடையாள அட்டையை காண்பியுங்கள் என்று கேட்டுள்ளார்.
கங்குலி அடையாள அட்டையை வர்ணனை அறையில் வைத்துவிட்டதால் மீண்டும் சென்று அதை எடுத்து வந்து காண்பித்துள்ளார். அதன் பிறகே யாதவ் கங்குலியை மைதானத்திற்குள் அனுமதித்துள்ளார்.
இது குறித்து மேற்கு வங்க கிரிக்கெட் அசோசியேஷனின் இணை செயலாளர் பிஸ்வரூப் டே கூறியதாவது,
இப்படி ஒரு சம்பவம் நடந்தது குறித்து நானும் கேள்விப்பட்டேன். அந்த விவகாரம் சுமூகமாகத் தீர்க்கப்பட்டது. இருப்பினும் நான் கங்குலியிடம் பேசவிருக்கிறேன் என்றார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:51 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications