ஜடேஜாவின் இடத்தை நிரப்ப போகும் வீரர் யார்.. போட்டியில் 2 வீரர்கள்.. பேட்டிங்கிலும் வந்தது சிக்கல்
டிரிண்டாட்: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருக்கிறது.
Recommended Video
இந்த நிலையில் அணியின் துணை கேப்டனான ரவீந்திர ஜடேஜாவுக்கு காலில் காயம் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை அடுத்து ஜடேஜா இன்றைய போட்டியில் பங்கேற்பது கேள்விக்குறியாகிவிட்டது, ஏற்கனவே ரோகித் சர்மா, விராட் கோலி ,ரிஷப் பண்ட், பும்ரா ஆகியோர் இல்லை.

ஜடேஜாவுக்கு மாற்று
இந்த நிலையில் ஜடேஜாவும் விலகி இருப்பது இந்திய அணிக்கு பின்னடைவை தந்துள்ளது. இந்த நிலையில் ஜடேஜா பிளேயிங் லெவனில் இல்லை என்றால் அவரது இடத்தை நிரப்ப கூடிய 2 வீரர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம். ஜடேஜா இல்லாத நிலையில் அவருடைய இடத்திற்கு முதலில் தேர்வு செய்ய வேண்டியது அக்சர்பட்டேலை தான். அக்சர் பட்டேல் இடது கை சுழற் பந்துவீச்சாளர் மற்றும் இடது கை பேட்ஸ்மேன் ஆவார்.

அக்சர் பட்டேல்
ஜடேஜாவை போல் அதிரடியாக ஆடக்கூடிய வீரர் அக்சர் பட்டேல். எனினும் ஜடேஜாவை போல் சர்வதேச ஒரு நாள் போட்டியில் அக்சர்பட்டேல் தனது திறமையை இன்னும் நிரூபிக்கவில்லை, அதற்கு இன்றைய ஆட்டம் நல்ல வாய்ப்பை தந்துள்ளது. அந்த இடத்தை நிரப்ப கூடிய இரண்டாவது நபர் தீபக் தீபக் ஹூடா. அயர்லாந்து இங்கிலாந்து தொடரில் சிறப்பாக ஆடி தனது திறமையை நிரூபித்து இருக்கிறார்.

தீபக் ஹூடா
அவருக்கு சுழற் பந்து வீச்சும் வீசத் தெரியும் என்பதால் அவருடைய இடம் பிளேயிங் லெவனில் முக்கியம் வாய்ந்தது. இந்த நிலையில், ஜடேஜா இல்லாததால் பேட்டிங் வரிசையில் சில மாற்றத்தை ஷிகர் தவான் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஜடேஜாவுக்கு பதில் அணியில் குறைந்தபட்சம் 2 ஆல்ரவுண்டர்களை அணியில் சேர்க்க வேண்டும்.

பேட்டிங் மாற்றம்
அதன் படி, மூன்றாவது இடத்தில் சூரிய குமார் யாதவையும், நான்காவது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயரையும், ஐந்தாவது இடத்தில் சஞ்சு சாம்சனையும், ஆறாவது இடத்தில் தீபக் ஹூடாவையும் ஏழாவது இடத்தில் ஷர்துல் தாக்கூரையும், எட்டாவது இடத்தில் அக்சர் பட்டேலையும், இந்திய அணையில் சேர்க்க வேண்டும் அப்படி இருந்தால் மட்டுமே பேட்டிங்கில் பலம் இருக்கும்.


Click it and Unblock the Notifications