For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நீண்ட தூரம் சிக்சர் அடித்தவர் யார்? நம்ம தல தான் அதிலும் பர்ஸ்ட்.. வீடியோவை பாருங்க… புரியும்

ராஞ்சி:நீண்ட தூரம் சிக்சர் அடித்தவர் யார் என்று டுவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை பிசிசிஐ மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதலிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Who could hit the longest six? bcci challenge at the nets during training

இரு அணிகள் மோதும் 3-வது ஒரு நாள் போட்டி தோனியின் சொந்த ஊரான ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. அதற்காக, ராஞ்சி வந்து சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் மேற்கொண்டனர்.

உலக கோப்பைக்கு பிறகும் தோனி விளையாடவேண்டும்.. கங்குலி ஆதரவு உலக கோப்பைக்கு பிறகும் தோனி விளையாடவேண்டும்.. கங்குலி ஆதரவு

வலைப்பயிற்சியின்போது இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு நீண்ட தூரம் சிக்சர் அடிக்கும் ஜாலியான போட்டி வைக்கப்பட்டது. இந்தப் போட்டியில் மகேந்திர சிங் தோனி, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, சாஹல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அனைவருக்கும் கணிசமான வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இந்த வீடியோவை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, யார் அதிக தூரம் சிக்சர் அடித்தார் என கேட்டுள்ளது.

வீடியோவைப் பார்க்கும்போது, பேட்ஸ்மேன்களை விட சுழற்பந்து வீச்சாளர் சாஹல் நன்றாக சிக்சர் அடித்ததை பார்க்க முடிந்தது. இருப்பினும், தோனியே நீண்ட தூரம் சிக்சர் அடித்துள்ளார் என வீடியோவில் தெரிகிறது.

Story first published: Friday, March 8, 2019, 12:43 [IST]
Other articles published on Mar 8, 2019
English summary
Who could hit the longest six? BCCI challenge at the nets during training session.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X