அடிப்படை விலையிலிருந்து 10 மடங்கு விலை போன இளம் வீரர்..!! யார் இந்த அபினவ் சட்ரங்கனி
பெங்களூரு: ஐபிஎல் மெகா ஏலம் ஓரே இரவில் ஓபாமான கதையை நாம் பார்த்து இருப்போம். அதே போல் யார் என்றே தெரியாத வீரர் ஒருவர் தற்போது பெரும் பணக்காரராக மாறிவிட்டார்.
கர்நாடகாவை சேர்ந்த அபினவ் சட்ரங்கனி பெய்ர் ஏல மேடைக்கு வந்ததும் இவரை எல்லாம் யார் வாங்க போகிறார்கள் என ரசிகர்கள் நினைத்தனர்.
ஆனால், இவர் பெயர் வந்ததும், ஐபிஎல் அணிகளுக்கு இடையெ கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் அவரது விலை கிடுகிடுவென நம்ம ஊர் பெட்ரோல் விலை போல் உயர்ந்தது.

சையது முஸ்தாக் அலி தொடரில் கர்நாடக அணிக்காக விளையாடியவர் அபினவ் சட்ரங்கனி, இவர் காலிறுதிக்கு முதல் சுற்றில் 49 பந்துகளில் 70 ரன்கள் குவித்துள்ளார். காலிறுதியில் 9 பந்துகளில் 19 ரன்கள் அடித்துள்ளார். அரையிறுதியில் 13 பந்துகளில் 27 ரன்களும், இறுதிப் போட்டியில் 37 பந்துகளில் 46 ரன்களும் அடித்துள்ளார்
நடுவரிசையில் பேட்டிங் செய்யும் அபினவ் சட்ரங்கனி ஹர்திக் பாண்டியா போல் அதிரடியாக ஆடக்கூடியவர். சுழற்பந்தும் வீசுவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அவர் பெயர் வந்ததும் கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் கடுமையாக மோதினர்.
கடைசியில் 2 கோடியே 60 லட்சம் ரூபாய்க்கு குஜராத் அணி அபினவ்வை ஏலத்தில் எடுத்தது. இதனை தொடர்ந்து அபினவ் யார் என்று ரசிகர்கள் இணையத்தில் தேடி வருகின்றனர். அவருடைய ஹைலைட்ஸ் காட்சிகளையும் தேடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications