Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலி Vs ரோகித் சர்மா யார் சிறந்த கேப்டன்? அதிக வெற்றி யாருக்கு?

மும்பை: இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்ட சம்பவம் தான் தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது

இது தொடர்பாக விராட் கோலி இதுவரை வாய் திறக்காத நிலையில், அவரது ரசிகர்களும். மூத்த வீரர்களும் பி.சி.சி.ஐ. முடிவை விமர்சித்து வருகின்றனர்

விராட் கோலி கேப்டனாக சிறப்பாக செயல்பட்டுள்ள நிலையில், அவர் ஏன் நீக்கப்பட்டார் என தொடர்ந்து கேள்வி எழுப்பினர்.

கங்குலி விளக்கம்

கங்குலி விளக்கம்

இதற்கு விளக்கம் அளித்துள்ள கங்குலி, ஒருநாள் போட்டிக்கு ஒரு கேப்டன், டி20க்கு ஒரு கேப்டன் என இரண்டு கேப்டன்கள் இருக்க முடியாது என்றுதெரிவித்தார். மேலும் விராட் கோலியின் கேப்டன்ஷி ரெக்கார்ட் நன்றாக இருப்பதாக குறிப்பிட்ட அவர் ரோகித் சர்மாவும் சில போட்டிகளில் கேப்டனாக இருந்து சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறார் என்று தெரிவித்தார்.

ஒருநாள் போட்டி

ஒருநாள் போட்டி

சரி, கங்குலியின் கூற்று படி விராட் கோலி 95 போட்டிகளில் கேப்டனாக இருந்து 65 போட்டிகளில் வென்று இருக்கிறார். அவருடைய வெற்றி சதவீதம் 70 ஆகும். ஆனால் ரோகித் சர்மா இதுவரை 10 போட்டியில் கேப்டனாக இருந்து 8 போட்டிகளில் வென்று இருக்கிறார். ரோகித்தின் வெற்றி சதவிதம் 80 ஆகும். துபாயில் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலேயே இந்தியா வென்றுள்ளது.

போட்டி

போட்டி

இதன் சிறப்பம்சமே இந்திய அணியில் விராட் கோலி இல்லாத போதே ரோகித் சர்மா இந்திய அணிக்கு கோப்பையை வென்று தந்துள்ளார்.இதே போன்று விராட் கோலி டி20 போட்டியில் 50 போட்டிகளில் தலைமை தாங்கி 30 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் ரோகித் சர்மா தலைமையில் 22 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 18 போட்டியில் வென்றுள்ளது.

Recommended Video

Captaincy மாற்றத்தின் பின் Rohit-ன் சம்பளம் என்ன? | Oneindia Tamil
ஐ.பி.எல்

ஐ.பி.எல்

ஐ.பி.எல். கதையை பற்றி நாம் பேசவே தேவையில்லை. ஏனென்றால் மும்பை அணி எத்தனை கோப்பை வாங்கி இருக்கிறது, பெங்களூரு அணி எத்தனை கோப்பை வாங்கி இருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும், எனவே கங்குலியின் கூற்றின் படி, கோலியை விட ரோகித் கேப்டனாக சிறப்பாக தான் செயல்பட்டுள்ளார் என்று தெளிவாக தெரிகிறது.

Story first published: Friday, December 10, 2021, 16:39 [IST]
Other articles published on Dec 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+