Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாருப்பா இந்த தனஸ்ரீ வர்மா? டாக்டரா? டான்சரா? இவ்வளவு ரசிகர்களா? கூகுளில் விடாமல் தேடும் மக்கள்!

மும்பை : ஒரே நாளில் லட்சக்கணக்கான மக்கள் தேடும் நபராக மாறி இருக்கிறார் தனஸ்ரீ வர்மா.

அதற்கு காரணம் கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் தான். அவர் நேற்று மாலை தனஸ்ரீ வர்மாவுடன் நிச்சயதார்த்தம் நடந்ததை அறிவித்தார்.

கூகுளில் தேடல்

கூகுளில் தேடல்

அப்போது தான் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் தனஸ்ரீ வர்மா குறித்து தெரிந்து கொண்டனர். பன்முகத்தன்மை கொண்ட அவர் குறித்து கூகுளில் பலரும் தேட ஆரம்பிக்க அவர் டிரென்டிங்கில் வந்துவிட்டார். அவருக்கு என ஏற்கனவே தனி ரசிகர் கூட்டம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

டிக்டாக்கில் சாஹல்

டிக்டாக்கில் சாஹல்

இந்திய அணியின் லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் சமூக வலை தளமான டிக்டாக்கில் பிரபலமாக இருந்தார். வேடிக்கையான வீடியோக்கள் போட்டு வந்தார். அவர் அடிப்படையில் ஒரு செஸ் விளையாட்டு வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்தம்

அவர் திடீரென ஆகஸ்ட் 8 அன்று மாலை தனக்கு தனஸ்ரீ வர்மாவுடன் நிச்சயதார்த்தம் ஆகி விட்டதாக தெரிவித்தார். தங்கள் குடும்பத்தினருடன், நாங்களும் இந்த திருமணத்துக்கு ஒப்புக் கொண்டோம் என சாஹல் - தனஸ்ரீ இணைந்து கூறி இருந்தனர்.

தனஸ்ரீ வர்மா யார்?

தனஸ்ரீ வர்மா யார்?

அப்போது தனஸ்ரீ வர்மா யார்? என்ற கேள்வி எழுந்தது. சில ஊடகங்களில் அவர் யூட்யூப் சேனல் நடத்தி வருகிறார். மேலும், நடனக் கலைஞர் என்ற தகவல்கள் இடம்பெறவே அனைவருக்கும் அவர் குறித்து தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்தது.

ஆச்சரியம்

ஆச்சரியம்

அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்தவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அவரை ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் 5 லட்சம் பேர் பின்தொடர்ந்து கொண்டு இருக்கிறார்கள். அது மட்டுமின்றி, அவரைப் பற்றி அவரே தெரிவித்து இருந்த தகவல்களும் ஆச்சரியம் அளித்தன.

கொரியோகிராபர், யூட்யூபர்

கொரியோகிராபர், யூட்யூபர்

தான் டாக்டர், கொரியோகிராபர், யூட்யூபர் என்றும் குறிப்பிட்டு இருந்தார். மேலும், தனஸ்ரீ வர்மா கம்பெனியின் நிறுவனர் எனவும் குறிப்பிட்டு இருந்தார். அதை அடுத்து அவர் குறித்து மேலும் கூகுளில் பலரும் தேடத் துவங்கினர். அதனாலேயே கூகுளில் டிரென்டிங் ஆனார்.

பல் மருத்துவர்

பல் மருத்துவர்

2014இல் பல் மருத்துவ படிப்பை முடித்துள்ளார் தனஸ்ரீ வர்மா. மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டில் டென்டல் காலேஜில் அவர் படிப்பை முடித்து வெளியேறும் போது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார். ஆனால், தற்போது அவர் பல் மருத்துவராக செயல்படுகிறாரா? என்பது தெரியவில்லை.

நடனம்

நடனம்

ஆனால், நடனக் கலைஞராக மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறார். தனஸ்ரீ வர்மா என்ற நடன பயிற்சி மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடத்தும் நிறுவனத்தை வைத்துள்ளார். யூட்யூப்பில் பல்வேறு பாடல்களுக்கு தானே நடன அசைவுகளை அமைத்து ஆடி இருக்கிறார்.

யூட்யூப் சேனல்

யூட்யூப் சேனல்

மேலும், அவரது யூட்யூப் சேனலை 15 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள். அது மட்டுமில்லை. பாலிவுட் பிரபலங்கள் பலர் அவரது வீடியோக்களில் தோன்றி அவருடன் நடனமும் ஆடி உள்ளனர். கார்த்திக் ஆர்யன், குரு ராந்தவா ஆகியோர் அதில் சிலர்.

இன்ஸ்டாகிராம் பக்கம்

இன்ஸ்டாகிராம் பக்கம்

அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாயுடன் இருக்கும் புகைப்படங்கள் அதிகம். அதே போல பயணம் செய்வதிலும் ஆர்வம் கொண்டவர் என்பதை சில பதிவுகள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. சமூக வலைதளங்களில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையும் வைத்துள்ளார் தனஸ்ரீ வர்மா. தற்போது சாஹல் மூலம் கிரிக்கெட் ரசிகர்களும் அவரை பின்தொடரத் துவங்கி உள்ளனர்.

Story first published: Sunday, August 9, 2020, 13:13 [IST]
Other articles published on Aug 9, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+