Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யார் இந்த ஜானகி ஈஸ்வர்??.. டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் தாக்கம்.. எப்படி தெரியுமா?

மெல்பேர்ன்: டி20 உலகக்கோப்பை தொடரில் திடீரென இந்தியாவை சேர்ந்த ஜானகி ஈஸ்வர் எனும் சிறுமியின் பெயர் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இரு அணிகளும் மோதும் இப்போட்டி மெல்பேர்னில் உள்ள மைதானத்தில் நடைபெறுகின்றன. இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 பாகிஸ்தான் vs இங்கிலாந்து

பாகிஸ்தான் vs இங்கிலாந்து

இந்த தொடரில் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி, இறுதிப்போட்டியில் இல்லாதது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக உள்ளது. ரோகித் சர்மாவாவது கோப்பை வென்று தருவார் என்று நினைத்த போது இங்கிலாந்துடன் படு மோசமான தோல்வியை பெற்று தந்தார். இதனால் பாகிஸ்தானாவது கோப்பை வெல்லட்டும் என இந்திய ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

யார் இந்த ஜானகி

யார் இந்த ஜானகி

இந்நிலையில் இன்றைய போட்டியில் இந்தியாவின் தாக்கம் இருக்கப்போகிறது. இதற்கு காரணம் ஜானகி ஈஸ்வர் தான். 13 வயதே ஆகும் இவர் இன்று இறுதிப்போட்டியின் நிகழ்ச்சியில் பங்கேற்று இசை விருந்து படைக்கவுள்ளார். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட இந்த சிறுமி ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற "Voice of Australia" நிகழ்ச்சியில் பங்குபெற்று புகழ்பெற்றார்.

மனவருத்தம்

மனவருத்தம்

அதன்பின்னர் பல்வேறு பெரும் நிகழ்ச்சிகளில் பாடி வந்த அவர், இன்று 90,000 ரசிகர்களுக்கு முன்பு மெல்பேர்னில் பாடவுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்த இறுதிப்போட்டியில் பாடுவதை பெருமையாக நினைக்கிறேன். ஆனால் இந்திய அணி இந்த போட்டியில் விளையாடாதது ஏமாற்றமாக இருக்கிறது; எனினும் சிறப்பாக நடத்திக்கொடுப்பேன் எனக் கூறியுள்ளார்.

 இரு அணிகளின் காத்திருப்பு

இரு அணிகளின் காத்திருப்பு

பாகிஸ்தான் அணி கடைசியாக 2009ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்றது. இதே போல இங்கிலாந்து அணி 2010ம் ஆண்டும் கோப்பையை வென்றுள்ளது. இதனால் இரு அணிகளும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களது 2வது கோப்பைக்காக காத்திருந்ததற்கு இன்று முடிவு வரவுள்ளது.

Story first published: Sunday, November 13, 2022, 10:27 [IST]
Other articles published on Nov 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+