Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நடாஷாவை பிரிந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை.. புதிய உறவில் இணைந்த ஹர்திக்.. யார் இந்த ஜாஸ்மின் வாலியா?

மும்பை: இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, பிரிட்டிஷை சேர்ந்த நடிகையும், பாடகியுமான ஜாஸ்மின் வாலியாவுடன் காதலில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் மனைவி நடாஷா ஸ்டான்கோவிக் உடனான திருமண உறவில் இருந்து விலகுவதாக ஜூலை 18ஆம் தேதி ஹர்திக் பாண்டியா அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இலங்கை அணியுடனான டி20 தொடருக்கு பின் ஹர்திக் பாண்டியா கிரீஸ் நாட்டில் விடுமுறையை கொண்டாடி வருகிறார். இதில் பாடகியும், நடிகையுமான ஜாஸ்மின் வாலியா மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் ஒரே இடத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த ஜாஸ்மின் வாலியாவின் பெற்றோர் இந்தியர்கள் தான்.

ipl 2025 Hardik Pandya Natasha Stankovic Jasmin Walia


இவர் பிரிட்டிஷ் ரியாலிட்டி தொலைக்காட்சி தொடரான ”தி ஒன்லி வே இஸ் எஸ்ஸக்ஸ்” என்ற தொடரின் மூலமாக பிரபலமடைந்தார். 2010ஆம் ஆண்டு இந்த தொலைக்காட்சி தொடரில் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானாலும், 2012ஆம் ஆண்டில் முழு நேர கதாபாத்திரமாக உயர்ந்திருக்கிறார். அது அவருக்கு பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்துள்ளது.

இதன் காரணமாக 2014ஆம் ஆண்டு தனது பெயரில் யூட்யூப் சேனல் ஒன்றை தொடங்கி நடத்தியுள்ளார். பிரபலமான பல்வேறு பாடல்களுக்கு கவர் சாங்ஸ் பாடி புகழ்பெற்ற அவர், ஜாக் நைட், ஓலி க்ரீன் உள்ளிட்டோருடனும் சேர்ந்து பணியாற்ற தொடங்கியுள்ளார். அதன்பின் "Bom Diggy" என்ற பாடலின் மூலம் உச்சத்திற்கு சென்ற ஜாஸ்மின், பல்வேறு வீடியோ பாடல்களிலும் இடம்பெற தொடங்கினார்.

தற்போது 6 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்களை இன்ஸ்டாகிராமில் வைத்துள்ள ஜாஸ்மின், ஹர்திக் பாண்டியாவுடன் காதல் உறவில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடாஷா ஸ்டான்கோவிக் உடனான உறவை முடித்து கொண்ட ஹர்திக் பாண்டியா, அடுத்ததாக ஜாஸ்மின் வாலியாவுடன் உறவில் இருப்பதாக கூறப்படுகிறது.

இன்ஸ்டாகிராமில் இருவரும் பின் தொடர்ந்து வருவதோடு, புகைப்படங்களுக்கும் லைக் செய்து வருகின்றனர். அதேபோல் ஜாஸ்மின் வாலியா இந்திய கிரிக்கெட்டர்களில் ஹர்திக் பாண்டியாவை மட்டுமே பின் தொடர்ந்து வருகிறார். இதன் மூலமாக இருவரும் காதல் உறவில் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Story first published: Wednesday, August 14, 2024, 10:52 [IST]
Other articles published on Aug 14, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+