For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியா? சச்சினா? யாருக்கு அதிக ரசிகர்கள்.. யார் அதிகமாக கொண்டாடப்பட்டார்கள்.. 2K Kids சொல்வது சரியா

மும்பை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த தொடர் தோனி விளையாடும் கடைசி தொடராக இருக்கும் என்பதால் சிஎஸ்கே அணியினர் நாடு முழுவதும் எங்கு சென்று விளையாடினாலும் அங்கு சென்னை அணி ரசிகர்கள் மைதானத்தை ஆக்கிரமித்துக் கொண்டார்கள்.

இந்த நிலையில் ரசிகர்கள் சிலர் பதிவிட்டுள்ள கருத்து ஒன்றுதான் தற்போது பெரிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதில் கிரிக்கெட் வீரர்களிலேயே தோனிக்கு தான் அதிக ரசிகர்கள் இருப்பதாகவும் தோனிக்கு இருக்கும் செல்வாக்கு வேறு யாருக்கும் இருந்ததில்லை என்றும் தோனி தான் ஆல் டைம் நம்பர் ஒன் என்றும் சிலர் கருத்து தெரிவித்திருந்தார்கள்.

Who is most famous cricketer sachin or ms dhoni

சரி இவ்வாறு கூறுகிறார்களே அவர்களுக்கு எவ்வளவு வயது இருக்கும் என்று போய் பார்த்தால் அனைவருமே 2005 ஆம் ஆண்டுக்கு பின் பிறந்தவர்களாக இருக்கிறார்கள். அப்படி இருக்க அவர்கள் 15 வயது கிரிக்கெட் பார்க்க தொடங்கியிருந்தார்கள் என்றால் 2020 ஆம் ஆண்டு தான் தங்களது முதல் ஐபிஎல் தொடரை பார்த்திருப்பார்கள்.

இல்லை பத்து வயதிலே நான் பார்த்து விட்டேன் என்று சொன்னால் கூட 2015 ஆம் ஆண்டு தான் அவர்கள் கிரிக்கெட் பார்க்க தொடங்கி இருப்பார்கள்.இதனை வைத்துக் கொண்டு தோனி தான் ஆல் டைம் நம்பர் ஒன் என்று கூறுவது சரிதானா? உண்மையில் தோனியை விட இன்டர்நெட் பேஸ்புக் வாட்ஸ் அப் என எதுவுமே இல்லாத நிலையில் சச்சின் தான் கிரிக்கெட்டையே இந்தியாவில் பிரபலப்படுத்தினார்.

1983 உலக கோப்பையை இந்தியா வாங்கிய பிறகும் தூர்தர்ஷனில் இந்தியா போட்டிகளை ஒளிபரப்ப பிசிசிஐ அவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் பணம் கட்ட வேண்டுமாம். ஆனால் சச்சின் டெண்டுல்கர் வருகைக்குப் பிறகு அதே தூர்தர்ஷன் உங்கள் போட்டியை எங்களிடம் ஒளிபரப்புங்கள் எனக் கூறி ஒரு போட்டிக்கு ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்தார்களாம். இது அனைத்துமே சச்சினில் பிரபலத்திற்கு ஒரு சிறிய உதாரணம்.

தொலைக்காட்சி,ரேடியோ, செய்தித்தாள் என எதைத் திருப்பினாலும் சச்சினின் பெயரும் சச்சினில் விளம்பரமும் ஆக்கிரமித்து இருந்தது. சச்சின் விளையாட்டை பார்க்க இது சேப்பாக்கம் மைதானத்தில் எத்தனை ரசிகர்கள் தவமாய் தவமிருந்து இருப்பார்கள். அவ்வளவு என் ஐபிஎல் தொடரில் சச்சின் விளையாடிய காலத்தில் கூட சிஎஸ்கே ரசிகர்கள் பட்டளமே சச்சின் சச்சின் என்று கத்தியதும் இப்போதுள்ள 2கே கிட்ஸ்க்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

Who is most famous cricketer sachin or ms dhoni

சச்சின் மீது உள்ள ஆர்வத்தால் நியூசிலாந்தில் வெளிநாட்டு குடும்பத்தினர் தன் மகனுக்கு சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் என பெயர் வைத்த நிகழ்வும் இருக்கிறது. அவ்வளவு என் அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமாவிடம் இந்தியா பற்றி கேள்வி கேட்கப்பட்டதற்கு அவர் கிரிக்கெட்டையும் சச்சினையும் தான் தமக்குத் தெரியும் என்று கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார். ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு ஹீரோக்கள் வருவதுண்டு.

ஆனால் ஒரு சிலர் மட்டும் தான் தலைமுறை கடந்தும் பிரபலமாக இருப்பார்கள். சச்சின் தோனி எல்லாம் அந்த புயல் தான் சேருவார்கள். தற்போது சமூக வலைத்தள தாக்கம் மிகவும் இருக்கிறது.அதில் என்ன அவர்கள் பார்க்கிறார்களோ அதுதான் உண்மை எனவும் தூக்கி கிட்ஸ்கள் நம்பி விடுகின்றனர். இப்போது இருக்கும் மிகப்பெரிய கிரிக்கெட் வீரர்கள் சச்சினை பார்த்து தான் கிரிக்கெட் பேட்டை கையில் எடுத்தார்கள் என்பது நினைவு கூறத்தக்கது.

Story first published: Thursday, June 1, 2023, 16:36 [IST]
Other articles published on Jun 1, 2023
English summary
Who is most famous cricketer sachin or ms dhoni
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+