Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிசிசிஐயின் தலைவராக "பின்னி" பெடல் எடுப்பாரா? யார் இந்த ரோஜர் பின்னி? இந்தியாவின் மற்றொரு ஹீரோ

பெங்களூரு: பிசிசிஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக ரோஜர் பின்னி தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகி விட்டது.

67 வயதான ரோஜர் பின்னி, இந்தியாவுக்காக விளையாடிய முதல் ஆங்கிலோ இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார். இவருடைய மகன் ஸ்டூவர்ட் பின்னியும் இந்தியாவுக்காக விளையாடி இருக்கிறார்.

பயிற்சியாளர், வீரர்களின் திறமையை அடையாளம் காணும் நிபுணர், நிர்வாகி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் ரோஜர் பின்னி செயல்பட்டு இருக்கிறார்.

யார் இந்த பின்னி?

யார் இந்த பின்னி?

தற்போது கர்நாடக கிரிக்கெட் சங்கத் தலைவராக பதிவி வகிக்கும் ரோஜர் பின்னி, இந்திய அணிக்காக 27 டெஸ்ட், 72 ஒருநாள் போட்டிகளில் விளையாடி மொத்தம் 205 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். பேட்டிங்கில் சராசரியாக 34 வைத்திருக்கிறார். பிசிசிஐயின் இதுவரை 2 டெஸ்ட் வீரர்களே பிசிசிஐ தலைவராக தங்களது பதவியை முழுமையாக இருந்துள்ளனர்.

சிறந்த ஹீரோ

சிறந்த ஹீரோ

ஒன்று கங்குலி, இன்னொருவர் பசுபதி விஜய் ஆனந்த கணபதி ராஜூ மட்டும் தான் 3 ஆண்டுகள் தங்களது பதவியை நிறைவு செய்துள்ளனர். கவாஸ்கர் மற்றும் சிவ்லால் சிறிது காலம் மட்டுமே பதவியில் இருந்துள்ளனர். கபில்தேவ் போலேவே இந்திய அணியின் தலைச் சிறந்த ஹீரோவாக ரோஜர் பின்னி இருந்திருக்கிறார்

அதிக விக்கெட்

அதிக விக்கெட்

1983 உலககோப்பையை இந்தியா வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் ரோஜர் பின்னி. ரோஜர் பின்னி அந்த தொடரில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்று இருந்தார். இதே போன்று 1985ஆம் ஆண்டு உலக கிரிக்கெட் சீரியஸில் ரோஜர் பின்னி 17 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

புகார்

புகார்

இங்கிலாந்துக்கு எதிரான மும்பையில் நடைபெற்ற ஜூப்லி டெஸ்டில் ரோஜர் பின்னி, தொடக்க வீரராகவும், தொடக்க பவுலராகவும் செயல்பட்டு இருக்கிறார். திறமையான வீரராகவும் நிர்வாகியாகவும் அறியப்படும் ரோஜர் பின்னி மீது, தன் மகன் ஸ்டூவர்ட் பின்னியை இந்திய அணிக்கு கொண்டு வர தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

காத்திருக்கும் சவால்கள்

காத்திருக்கும் சவால்கள்

ஆனால் அந்த காலக் கட்டத்தில் ஸ்டூவர்ட் பின்னி மட்டும் தான் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக இந்தியாவில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு நடைபெறும் உலககோப்பையை சிறப்பாக நடத்துவது, மகளிர் ஐபிஎல் தொடர், உலககோப்பைக்கு மத்திய அரசிடமிருந்து வரி விலக்கு,பாகிஸ்தான் பயணம் உள்ளிட்ட சவால்கள் ரோஜர் பின்னிக்கு காத்திருக்கிறது.

Story first published: Tuesday, October 18, 2022, 17:05 [IST]
Other articles published on Oct 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+