Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலியே எதிர்பாக்காத ட்விஸ்ட்.. பீதியில் இங்கிலாந்து.. யார் இந்த ஷபாஸ் நதீம் ?

சென்னை: இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், யாருமே எதிர்பாராதவிதமாக ஸ்பின்னர் ஷாபஸ் நதீம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணியுடனான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சென்னையில் இன்று (ஃபிப்ரவரி.5) தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ரூட் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணியில் அக்ஷர் படேலுக்கு திடீரென முழங்காலில் காயம் ஏற்பட்டதால், 31 வயதான அனுபவம் வாய்ந்த ஸ்பின்னர் ஷாபஸ் நதீம் ஸ்குவாடில் சேர்க்கப்பட்டது மட்டுமல்லாமல், பிளேயிங் லெவனிலும் இடம் பிடித்துள்ளார்.

 ஷாபஸ் நதீம் ஹிஸ்டரி

ஷாபஸ் நதீம் ஹிஸ்டரி

நம்ம நாட்டு ஸ்பின்னர்களுக்கு என்று ஒரு தனி அடையாளம் உள்ளது. அதனை ஆர்தடாக்ஸ் ஸ்பின் என்று அழைப்பார்கள். அதாவது, விரல்களை பயன்படுத்தி பந்துவீசுவது. ஆதி காலம் தொட்டு, இப்படி விரல்களை பயன்படுத்தி பந்துவீசி தான் எதிரணிகளை கட்டுக்குள் வைத்திருந்தது இந்திய ஸ்பின் கூட்டணி. அப்படியொரு ஆர்தடாக்ஸ் லெஃப் ஆர்ம் ஸ்பின்னர் இந்த ஷாபஸ் நதீம்.

 கோலியே எதிர்பார்க்காத ட்விஸ்ட்

கோலியே எதிர்பார்க்காத ட்விஸ்ட்

ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக வெளியேறியது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. அதற்கு மாற்றாக தான் அக்ஷர் பட்டேல் அணியில் சேர்க்கப்பட்டார். அவரை எப்படி டீல் செய்வது என்பது குறித்து தான் இங்கிலாந்து பல ஸ்டிராடஜிகளை வகுத்திருந்தது. ஆனால், அவரும் காயம் காரணமாக இப்போது வெளியேற ஷாபஸ் நதீம்க்கு அந்த வாய்ப்பு கிட்டியுள்ளது.

 தென்னாப்பிரிக்காவை சாய்த்த நதீம்

தென்னாப்பிரிக்காவை சாய்த்த நதீம்

நதீம் இந்தியாவுக்காக ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடியிருக்கிறார். 2019ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ராஞ்சியில் நடந்த போட்டி அது. இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து மொத்தம் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 ஜடேஜா ஸ்பாட்டுக்கு பெஸ்ட் சாய்ஸ்

ஜடேஜா ஸ்பாட்டுக்கு பெஸ்ட் சாய்ஸ்

உள்ளூர் கிரிக்கெட்டில் ஸ்பின்னராக மட்டுமில்லாமல், ஒரு டீசண்ட்டான ஆல் ரவுண்டராகவும் நதீம் இருப்பது இந்தியாவுக்கு கூடுதல் பிளஸ். அதுமட்டுமின்றி, அவர் பக்கா ஃபீல்டரும் கூட பாஸ். ஒரு நல்ல அத்லெடிக். ஐபிஎல் ரசிகர்களுக்கு தெரியும், அவரது ஃபீல்டிங் எபிலிட்டி பற்றி. அதுவும், பவுண்டரி லைன்களில் அவரது டைவ் எப்போதும் 'க்யூட்' ரகம்.

 நிரூபிப்பாரா நதீம்?

நிரூபிப்பாரா நதீம்?

லெஃப்ட் ஆர்ம் ஆர்தடாக்ஸ் ஸ்பின்னர்களிடம் இங்கிலாந்து எப்போதும் தள்ளாடும். அதனால் தான், ஜடேஜாவை இந்தியா ரொம்பவே மிஸ் செய்வதாக சொன்னேன். இப்போது நதீம் திடீரென அணியில் சேர்க்கப்பட்டுள்ளதால், இவருக்கு எதிரான ஸ்டிராடஜி வகுக்க கிடைக்கும் கொஞ்ச நஞ்ச நேரத்தில் இங்கிலாந்தால் எந்த அளவுக்கு பயன்படுத்த முடியும் என்று தெரியவில்லை.

Story first published: Friday, February 5, 2021, 17:34 [IST]
Other articles published on Feb 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+