யார் இந்த சிவம் மவி? இந்திய டி20 அணியில் இடம் பிடித்தவர்.. வாய்ப்பு கிடைத்தது குறித்து பேட்டி
மும்பை : இந்தியா இலங்கை அணிகள் மோதும் முதல் டி20 போட்டி வரும் ஜனவரி 3ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான 16 பேர் கொண்ட அணியில் கேஎல் ராகுல் ,விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் சிவம் மவி, முகேஷ் குமார் ராகுல் திருப்பாதி ஆகியோர்களுக்கு டி20 போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருப்பது சிவம் மவி தான்.
என்னடா இந்த பெயரை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறது என்று நீங்கள் யோசிக்கிறீர்களா? ஆம் இவர் ஒரு காலத்தில் அண்டர் 19 கிரிக்கெட்டில் விளையாடி அதிவேகமாக பந்து வீசி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

சிறப்பான ஆண்டு
எனினும் காயம் காரணமாக பல்வேறு போட்டிகளில் விளையாடாமல் ஓய்வில் இருந்தார். இருப்பினும் தமக்கு கிடைத்த ஐபிஎல் போட்டிகள் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டாலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் சிவம் மவி தனது கிரிக்கெட்டுக்காக பல முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார். குறிப்பாக நடந்து முடிந்த சையது முஸ்தாக் அலி தொடரில் 14 விக்கெட்டுகளையும் ,விஜய் ஹசாரே ஒரு நாள் தொடரில் 14 விக்கெட்களையும் சிவம் மவி வீழ்த்திருக்கிறார்.

மிகவும் கடினம்
இதனால் அவருக்கு இந்திய டி20 அணியில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இது குறித்து பேசிய சிவம் மவி, இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்திருப்பது நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாடுவதை நான் ஆர்வமாக எதிர்நோக்கி காத்திருக்கிறேன். ஹர்திக் பாண்டியா அனைத்து வீரர்களுக்கும் ஆதரவாக இருப்பார் என்று நான் அறிந்திருக்கிறேன் .ஐ பி எல் சாம்பியன் ஆக இருப்பது அதுவும் முதல் தொடரிலே கோப்பையை வாங்குவது என்பது மிகவும் கடினம் .

பாராட்டு
ஆனால் அதனை சுலபமாக ஹர்திக் பாண்டியா மேற்கொண்டார். ஹர்திக் பாண்டியா அமைதியாக இருந்து நெருக்கடியான நேரத்தில் தைரியமான முடிவு எடுக்கக் கூடியவர். களத்தில் எதிரணிக்கு நெருக்கடி அளிக்கக்கூடிய பல யுக்திகளை கையாள்வதில் வல்லவர். போட்டியில் எந்த வீரருக்கு பந்து வீச வாய்ப்பு வழங்க வேண்டும். பேட்டிங் வரிசையில் யாரை களம் இறக்க வேண்டும் என்பது குறித்து ஹர்திக் பாண்டியாவுக்கு நன்றாக தெரியும்.

எதிர்பார்க்கிறேன்
எனக்கு இலங்கை தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. எனில் அது மிகவும் கடினமான விஷயம். ஆனால் எனக்கு வாய்ப்பு கிடைத்து அதிலிருந்து நான் தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என ஆசைப்படுகிறேன் . இதுபோன்று சிவம் மவி, ஐபிஎல் 2023 ஆம் தொடரில் குஜராத் அணிக்காக 6 கோடி ரூபாய் ஏலம் போயிருக்கிறார். இது குறித்து பேசிய சிவம் மவி நான் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதற்கான பரிசாக இதை நினைக்கிறேன்.

குஜராத் அணி
குஜராத் அணியில் விளையாட வேண்டும் என நான் எதிர்பார்த்தேன். காரணம் அந்த அணியின் நிர்வாகிகள் வீரர்களை சிறப்பாக கையாளுவார்கள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஹர்திக் பாண்டியா, ஆஷிஸ் நெஹ்ரா போன்ற சிறந்த நிர்வாகிகள் குஜராத் அணியில் இருக்கிறார்கள். இதனால் அது எனக்கு நல்ல பயனாக இருக்கும் என கருதுகிறேன் என்று சிவம் மவி கூறினார்.


Click it and Unblock the Notifications