Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தானுக்கு வேட்டு வைத்த முன்னாள் பாக். குடிமகன்.. இந்தியாவுக்காக பிரார்த்தனை செய்ய போகும் பாக்!

பெர்த் : டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வேயிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை தழுவியது.

இதன் மூலம் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான அணி தோல்வியை தழுவி தற்போது அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு கானல் நீர் போல் ஆகிவிட்டது.

இனி எஞ்சிய மூன்று போட்டிகளிலும் பாகிஸ்தான அணி வெற்றி பெற்றாலும் கூட அடுத்த அணிகளின் தயவு இருந்தால் மட்டுமே அரையிறுதி சுற்றுக்குச் செல்ல முடியும்.

திருப்புமுனை

திருப்புமுனை

பாகிஸ்தானுக்கு இப்படிப்பட்ட நிலைமை யாரால் வந்தது என்று பார்த்தீர்கள் என்றால் அவரும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முன்னாள் குடிமகன் தான். ஆம், பாகிஸ்தான அணி வலுவான நிலையில் இருந்த போது இரண்டு ஓவரில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்தவர் சிக்கந்தர் ராசா. இதனால்தான் வெற்றி பெற வேண்டிய பாகிஸ்தான அணி அதிர்ச்சி தோல்வி தழுவி இருக்கிறது.

யார் சிக்கந்தர் ராசா?

யார் சிக்கந்தர் ராசா?

1986 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் பிறந்த சிக்கந்தர் ராசா, தனது 16 வது வயதில் ஜிம்பாப்வேவிற்கு குடும்பத்துடன் புலம்பெயர்ந்து உள்ளார். அதிலிருந்து ஜிம்பாப்வே உள்ளூர் போட்டிகளில் விளையாடிய அவருக்கு 2011 ஆம் ஆண்டு தான் குடியுரிமை கிடைத்து. ஜிம்பாப்வே அணியின் நட்சத்திர வீரராக விளங்கும் சிக்கந்தர் ராசா, பல்வேறு போட்டிகளில் வெற்றியைப் பெற்று தந்திருக்கிறார்.

புள்ளி பட்டியல்

புள்ளி பட்டியல்

தற்போது டி20 உலக கோப்பையில் தனது சிறப்பான செயல் மூலம் ஜிம்பாப்வே கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறார். தற்போது புள்ளி பட்டியலில் ஜிம்பாப்வே அணி மூன்று புள்ளிகள் உடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்திய அணி முதல் இடத்திலும், தென்னாப்பிரிக்கா அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது. நான்காவது இடத்தில் வங்கதேசமும், ஐந்தாவது இடத்தில் பாகிஸ்தானும் இருக்கிறது. தற்போது பாகிஸ்தான் அரையிறுதிக்குச் செல்ல வேண்டுமென்றால் இந்திய அணி இந்திய அனைத்து போட்டிகளிலும் வெல்ல வேண்டும்.

அரையிறுதி வாய்ப்பு

அரையிறுதி வாய்ப்பு

இதேபோன்று தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பாகிஸ்தான அணி கண்டிப்பாக வெல்ல வேண்டும். இது எல்லாம் நடந்தால் கூட ரன் ரேட் அடிப்படையில் தான் அடுத்த சுற்றுக்கு செல்ல போகும். கடந்த டி20 உலக கோப்பையில் இதே நிலைமையில் இந்திய அணி இருந்தது. அப்போது பாகிஸ்தான அணி சூப்பர் சிக்ஸில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வென்று அசத்தியது. தற்போது நிலைமை அப்படியே தலைகீழ் மாறி இருக்கிறது.

Story first published: Thursday, October 27, 2022, 22:28 [IST]
Other articles published on Oct 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+