Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யார் இந்த ஸ்ரீதரன் சரத்? பிசிசிஐ தேர்வுக்குழுவில் ஜொலிக்கும் தமிழர்.. இந்தியாவின் ரணதுங்கா - விவரம்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் தென் மண்டலத்திற்காக தமிழர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

ஆஸ்திரேலியாவில் கடந்தாண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதி சுற்றுடன் வெளியேறியது. இதனையடுத்து பிசிசிஐ பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தது.

அதன்படி இந்திய அணிக்கு வீரர்களை தேர்வு செய்த சேட்டன் சர்மா தலைமையிலான மொத்த குழுவையும் அதிரடியாக நீக்கியது. மாற்று தேர்வுக்குழுவினருக்கான தேர்வும் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து பரபரப்பாக நடைபெற்று வந்தது.

v

v

அதன்படி தற்போது அதற்கான இறுதி பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதாவது, மீண்டும் தேர்வுக்குழுவின் தலைவராக சேட்டன் சர்மாவே நியமிக்கப்பட்டிருக்கிறார். இவருக்கு கீழ், தேர்வுக்குழு உறுப்பினர்களாக ஷிவ் சுந்தர் தாஸ், சுப்ரதோ பானர்ஜி, சலில் அங்கோலா, ஸ்ரீதரன் ஷரத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

யார் இந்த சரத் ஸ்ரீதரன்

யார் இந்த சரத் ஸ்ரீதரன்

இந்நிலையில் தென்மண்டலத்தின் சார்பில் தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீதரன் சரத் வாய்ப்பு பெற்றுள்ளார். வெங்கடேஷ் பிரசாத் மற்றும் சரத் போட்டியிட்ட சூழலில் பிசிசிஐ ஸ்ரீதரனை தேர்வு செய்து இருக்கிறது. இதற்கு காரணம் அவரின் ரெக்கார்ட்கள் தான். இந்தியாவின் 19வயதுக்குட்பட்டோருக்கான அணியின் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீதரன் சரத் தான் ஆகும்.

U19 தேர்வுக்குழு தலைவர்

U19 தேர்வுக்குழு தலைவர்

கடந்த 2021ம் ஆண்டு இவர் தேர்வுக்குழு தலைவராக இருந்த போது தான் இந்திய U19 அணி உலகக்கோப்பையை வென்று அசத்தியது. இவரும் தற்போதைய இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் ஒன்றாக இணைந்து U 19 அணிக்காக விளையாடியவர்கள் ஆகும். ஆனால் துரதிஷ்டவசமாக சரத் ஸ்ரீதரனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

 அட்டகாச சாதனை

அட்டகாச சாதனை

ரஞ்சிக்கோப்பையில் தமிழகத்திற்காக 100 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் ஸ்ரீதரன் சரத் ஆகும். மொத்தமாக 139 போட்டிகளில் ஆடியுள்ளார். 15 ஆண்டுகள் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடிய அவர், 8,700 ரன்களை அடித்துள்ளார். இதில் 27 சதங்களும் 42 அரைசதங்களும் அடங்கும்.

இந்தியாவின் ரணதுங்கா

இந்தியாவின் ரணதுங்கா

U19 கிரிக்கெட்டில் இந்திய அணி சிக்கலில் சிக்கிய போதெல்லாம் பல முறை இவரே காப்பாற்றியிருக்கிறார். இதனாலேயே ஸ்ரீதரன் சரத்தை அடுத்த ரணதுங்கா என புகழ்ந்து தள்ளினார்கள். ஆனால் இந்திய சீனியர் அணியில் அப்போது சச்சின், சேவாக், டிராவிட் ஆகியோர் இருந்ததால் கடைசி வரை ஸ்ரீதரனுக்கு வாய்ப்பே இல்லாமல் போனது.

Story first published: Saturday, January 7, 2023, 18:22 [IST]
Other articles published on Jan 7, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+