நமக்குக் கிடைக்காத அந்த 6வது கோப்பை யாருக்கோ?
சென்னை: நமக்கு இல்லை.. நமக்கு இல்லவே இல்லை என்று தருமி நாகேஷ் மாதிரி இந்திய ரசிகர்கள் புலம்பிக் கொண்டிருந்தாலும் கூட மறுபக்கம், இன்று இரவு 6வது டி20 உலக சாம்பியனை காணத் தயாராகி வருகின்றனர்.
பெரும் பரபரப்புடனும், விறுவிறுப்புடனும் நடந்து வந்த டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் இன்றுடன் முடிவுக்கு வருகின்றன. இதுவரை 5 சாம்பியன்களைக் கண்ட இந்தத் தொடர் இன்று 6வது சாம்பியனைக் காண தயாராகி விட்டது.
இன்று இரவு கொல்கத்தாவில் நடைபெறும் இறுதிப் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகளும், இங்கிலாந்தும் மோதவுள்ளன. இதுவரை நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற சாம்பியன்களைப் பார்க்கலாம்..

முதல் சாம்பியன் இந்தியா
இந்தியாதான் முதல் டி20 சாம்பியன் ஆகும். 2007ம் ஆண்டு நடந்த முதல் உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா அபாரமாக வெற்றி பெற்று கோப்பையை வென்று அசத்தியது.

2வது சாம்பியன் பாகிஸ்தான்
இந்தியாவைத் தொடர்ந்து ஆசிய கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒன்றான பாகிஸ்தான் 2009ம் ஆண்டு பட்டத்தை வென்றது.

2010ல் இங்கிலாந்து
இங்கிலாந்து அணி 3வது பட்டத்தை தட்டிச் சென்றது. 2010ல் நடந்த உலகக் கோப்பைத் தொடரை வென்று சாம்பியன் ஆனது இங்கிலாந்து.

2012ல் மேற்கு இந்தியத் தீவுகள்
மேற்கு இந்தியத் தீவுகள் அணி 4வது சாம்பியன் ஆகும். 2012ல் நடந்த தொடரை வென்று சாம்பியன் பட்டத்தைப் பெற்றது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.

நடப்புச் சாம்பியன் இலங்கை
இலங்கை அணிதான் நடப்புச் சாம்பியனாகும். 2014ல் நடந்த உலகக் கோப்பைத் தொடரில் சாம்பியன் பட்டத்தைப் பெற்றது இலங்கை. ஆனால் இந்தத் தொடரில் அது அரை இறுதிக்குக் கூட வர முடியாமல் வெளியேறி விட்டது.


Click it and Unblock the Notifications