Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பையில் சிறந்த பேட்ஸ்மேன் யார்? கோலியா? சூர்யகுமாரா? சேவாக், ஜாகீர், நேஹ்ரா பளீச் பதில்

மும்பை : டி20 உலக கோப்பையில் சிறந்த பேட்ஸ்மேன்கள் யார் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்கள் பதிலளித்துள்ளனர்.

நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் விராட் கோலி அதிக ரன்கள் அடித்து முதல் இடத்தை பிடித்தார்.

இந்த நிலையில் இந்திய அணியின் சூரியகுமார் யாதவும், இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹெல்ஸ், ஜாஸ் பட்லர் ஆகியும் அதிரடியாக விளையாடி ரசிகர்களின் மதிப்பை பெற்றனர்.

ஜாகீர் கான் பதில்

ஜாகீர் கான் பதில்

இந்த நிலையில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு முதலில் பதில் அளித்த ஜாகிர் கான், சூரியகுமார் யாதவுக்கு இது சிறந்த உலக கோப்பையாக அமைந்தது. ஜாஸ் பட்லர் தொடர் முடியும் நேரத்தில் பார்முக்கு திரும்பி சிறப்பாக விளையாடினார்.

விராட் கோலிக்கு ஓட்டு

விராட் கோலிக்கு ஓட்டு

அலெக்ஸ்களும் இந்த தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். ஆனால் இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடியவர் யார் என்று கேட்டால் நான் விராட் கோலி என்று தான் சொல்வேன். அவர் மட்டும்தான் தொடர்ந்து ரன்களை குவித்து வந்தார் .விராட் கோலி பாகிஸ்தானுக்கு எதிராக ஆடிய ஆட்டம் மிகவும் சிறந்த ஒன்று.இதனை தொடர்ந்து பேசிய ஷேவாக் விராட் கோலி இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடியதாக பாராட்டினார்.

சேவாக் பதில் என்ன?

சேவாக் பதில் என்ன?

என்னை கேட்டால் நான் விராட் கோலியை தான் டி20 உலக கோப்பை தொடரில் சிறந்த பேட்ஸ்மனாக விளங்கினார் என்று கூறுவேன். ஆனால் சிறந்த ஆட்டம் என்று என்னிடம் கேட்டால் நான் நியூசிலாந்து வீரர் கிளன் பிலிப்சை தான் சொல்வேன். இலங்கைக்கு எதிராக அவர் சதம் விளாசியது பாராட்டத்தக்கது என்று கூறினார்.இதனை தொடர்ந்து பேசிய ஆசிஷ் நெஹ்ரா, சூரியகுமார் யாதவ் தான் இந்த தொடரில் சிறந்த பேக்ஸ்பனாக விளங்கியதாக பாராட்டினார்.

நெஹ்ரா பதில்

நெஹ்ரா பதில்

அவர் இந்தியர் என்பதால் நான் இதை சொல்லவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக சூரியகுமார் தான் டி20 கிரிக்கெட்டில் கோலொச்சி வருகிறார். பேட்டிங் வரிசையில் நான்காவது இடத்தில் களம் இறங்கி தொடர்ந்து அதிரடியாக ஆடுவது சுலபமான காரியம் கிடையாது. அதேபோன்று ஷேவாக் கூறியபடி சிறந்த ஆட்டம் என்றால் நான் நியூசிலாந்து வீரர் பிலிப்ஸ் இலங்கைக்கு எதிராக சதம் அடித்ததை தான் சொல்வேன் என்று குறிப்பிட்டார்.

Story first published: Friday, November 18, 2022, 23:13 [IST]
Other articles published on Nov 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+