Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி vs ரோகித் சர்மா யார் சிறந்த கேப்டன்? வாசிம் ஜாபர் பளிச் பதில்.. ஒருவேளை உண்மையாக இருக்குமோ?

மும்பை: இந்திய அணியின் சிறந்த கேப்டன் விராட் கோலியா? இல்லை ரோகித் சர்மாவா என்ற கேள்விக்கு முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் பளிச் பதிலை அளித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்ட விராட் கோலி, டெஸ்ட் போட்டியிலிருந்தும் பதவியை ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து கேப்டன் பதவி ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது. இது தவறான முடிவு என்று ரசிகர்கள் குற்றஞ்சாட்டினர்.

புலி பாய்ச்சல்

புலி பாய்ச்சல்

கேப்டனாக விராட் கோலி தான் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தினர். விராட் கோலி தலைமையில் இந்திய டெஸ்ட் தரவரிசையில் இந்தியா நம்பர் 1 அணியாகவும், உள்ளூர் டெஸ்ட் தொடரில் வென்றும் இருந்தது. ஆனால் ஐசிசி கோப்பையை இதுவரை வெல்லவில்லை. ஆனால் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி புலி பாய்ச்சல் போட்டு வருகிறது.

ரோகித் சாதனை

ரோகித் சாதனை

நியூசுலாந்துக்கு எதிரான டி20 தொடர் ஓயிட்வாஷ், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ஓயிட்வாஷ் மற்றும் இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் ஓயிட்வாஷ் என ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி தோல்வியை தழுவாமல் விளையாடி வருகிறது. டி20 போட்டியில் தொடர் வெற்றி என்ற சாதனையையும் ரோகித் சர்மா படைத்தார்.

கோலி Vs ரோகித்

கோலி Vs ரோகித்

இதனையடுத்து சிறந்த கேப்டன் யார் என்ற கேள்வி மீண்டும் எழுந்தது. இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த வாசிம் ஜாபர், கோலியை விட சிறந்த கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவார் என்று பதில் அளித்தார். போட்டிகளின் முடிவுகளை பார்த்தாலே தெரிகிறது சரியான நபர் கையில் தான் கேப்டன் பதவி சென்றுள்ளது. ரோகித் சர்மா சிறப்பாக யுத்திகளை கையாள்கிறார்.

Recommended Video

Rohit Sharma's 5 Hilarious Press Meets | OneIndia Tamil
நம்பிக்கை

நம்பிக்கை

இந்திய அணியின் சிறந்த கேப்டன்களில் ஒருவராக ரோகித் சர்மா திகழ்கிறார். இன்னும் எத்தனை டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா தலைமை தாங்குவார் என தெரியாது. நாம் ஒரு டெஸ்ட் போட்டியில் தான் விளையாட போகிறோம். தொடர்ந்து சொந்த மண்ணில் விளையாட உள்ளோம். இதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவது கடினமாக இருக்காது.

Story first published: Wednesday, March 16, 2022, 16:27 [IST]
Other articles published on Mar 16, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+