Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எப்படிங்க இது? ஆஸ்திரேலியாவுக்காக ஆடிய இந்திய வீரர் தன்வீர் சங்கா.. யார் இவர்?

ராஜ்கோட் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் இந்திய வம்சாவளி வீரர் தன்வீர் சங்கா இடம் பெற்று இருந்தார்.

இந்தியாவுக்கு எதிராக அவர் ஆடும் முதல் போட்டி இதுதான். திடீரென இந்தியர் ஒருவர், இந்திய அணிக்கு எதிராக ஆடுவதை பார்த்து ரசிகர்கள் பலர் ஆச்சரியம் அடைந்தனர். வேறு அணிகளில் கூட இப்படி நாம் பார்த்திருப்போம். ஆனால், ஆஸ்திரேலியா அணியில் நுழைவது அத்தனை எளிதல்ல. எப்படி ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றார் தன்வீர் சங்கா?

Who is the Indian origin player Tanveer Sangha played in India vs Australia 3rd ODI?

தன்வீர் சங்காவின் குடும்பம் இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்தது. தன்வீரின் தந்தை ஜோகா சங்கா சிட்னியில் டாக்ஸி டிரைவராக உள்ளார். தன்வீரின் தாய் அப்னீத் சிட்னியில் கணக்காளராகப் பணிபுரிகிறார். தன்வீரின் குடும்பம் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் அருகே உள்ள ரஹிம்பூரைச் சேர்ந்தது. தன்வீர் சங்கா 26 நவம்பர் 2001 அன்று ஆஸ்திரேலியாவின் சிட்னியில் பிறந்தார்.

ராஜ்கோட்டில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்பு தன்வீர் சங்கா ஒரு ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். லெக்பிரேக் ஸ்பின்னர் என்ற அடையாளத்துடன் தன்வீர் சங்கா ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றார்.

2018 ஆம் ஆண்டில், தன்வீர் சங்கா 16 வயதாக இருந்தபோது, ​​முன்னாள் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஃபவாத் அகமதுவால் கவனிக்கப்பட்டார். அப்போது சங்காவின் பந்துவீச்சு தனித்துவமாக இருந்தது. அந்த நேரத்தில், சங்கா தனது பெற்றோருடன் சிட்னியில் வசித்து வந்தார்.

சங்கா தனது ஜூனியர் கிரிக்கெட் வாழ்க்கையை வேகப்பந்து வீச்சாளராகத் தொடங்கினார் என்பதை மிகச் சிலரே அறிந்திருப்பார்கள். ஆனால் அவர் இளமைப் பருவத்தை அடைந்ததும், சங்கா லெக் ஸ்பின்னராக மாறினார். இங்கிருந்து தான் அவருக்கு கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கியது என்றே கூறலாம். பின்னர் தனது பந்துவீச்சை இன்னும் கூர்மைப்படுத்தத் தொடங்கினார்.

சங்கா அப்போது கிளப் கிரிக்கெட்டில் பிரபலமடையத் தொடங்கினார், அதன் பிறகு மெல்போர்னில் ஆஸ்திரேலியாவின் 16 வயதுக்குட்பட்ட அணியில் ஆடிய போது அவர் ஃபவாத் அகமது-வை சந்தித்தார். 18 வயதில், நியூ சவுத் வேல்ஸ் ப்ளூஸ் அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. இதற்குப் பிறகு அவர் சிட்னி தண்டர் அணிக்காக பிக் பாஷ் லீக்கில் விளையாடினார். அங்கு அவர் சிறப்பாக ஆடி விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதற்குப் பிறகு, 2020இல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் சங்கா இடம் பெற்றார். அதில் அவர் அற்புதமாக பந்துவீசி 11 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தப் போட்டிகளில் அவர் பேட்டிங்கில் 132 ரன்களையும் எடுத்துள்ளார். அதன் சராசரி 32 ஆகும்.

குரிந்தர் சந்துவுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்காக விளையாடும் இரண்டாவது இந்திய வம்சாவளி கிரிக்கெட் வீரர் தன்வீர் சங்காதான். ஆகஸ்ட் 30 அன்று டர்பனில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் தன்வீர் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது தன்வீரின் முதல் டி20 போட்டியாகும். லெக்பிரேக் சுழற்பந்து வீச்சாளர் சங்கா, ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் டி20 அறிமுகப் போட்டியில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த வீரர்களின் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தார்.

அதன் பின்னும், அவருக்கு ஆஸ்திரேலிய அணியில் தொடர்ந்து இடம் கிடைக்கவில்லை. தற்போது இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரில் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான சூழல் இருக்கும் என்பதால் தன்வீர் சங்காவை அணியில் சேர்த்துள்ளது ஆஸ்திரேலியா.

Story first published: Thursday, September 28, 2023, 7:14 [IST]
Other articles published on Sep 28, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+