Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யார் இந்த ரகு ராகவேந்திரா??.. வங்கதேசத்தை வீழ்த்த முக்கிய காரணம்..இந்திய ரசிகர்கள் கொண்டாடுவது ஏன்?

அடிலெய்ட்: வங்கதேச அணியுடனான போட்டியின் போது ரகு ராகவேந்திர என்ற நபர் திடீரென இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதை வென்றுள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று இந்திய அணி தனது 4வது லீக் போட்டியாக வங்கதேச அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

மழையின் காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டதால், கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவை என்ற சூழல் இருந்தது. ஆனால் அர்ஷ்தீப் சிங்கின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் த்ரில் வெற்றி கிடைத்தது.

சுவாரஸ்ய நிகழ்வு

சுவாரஸ்ய நிகழ்வு

இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டது என்ற மகிழ்ச்சியில் ரசிகர்கள் இருக்கும், அதே வேளையில், ரகு ராகவேந்திர என்ற நபரும் இந்திய ரசிகர்கள் மத்தியில் பேசுப்பொருளாகியுள்ளார். இதற்கு காரணம் நேற்றைய போட்டியில் அவர் செய்த விஷயம் தான். வங்கதேச இன்னிங்ஸின் போது மழைக்குறுக்கிட்டதால், வீரர்கள் வழுக்கி விழும் அச்சம் இருந்தது. அப்போது கையில் தண்ணீர் மற்றும் பிரஸுடன் புறப்பட்டார் ரகு.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இந்திய அணியின் த்ரோ டவுன் ஸ்பெஷலிஸ்டாக பல வருடமாக இருக்கிறார் ரகு. ஃபீல்டிங் செய்யும் போது வீரர்கள் விழுந்துவிடக்கூடாது என்பதற்காக, கையில் பிரஸை வைத்துக்கொண்டு மைதானத்தை சுற்றி சுற்றி வந்தார். ஒவ்வொரு வீரராக சென்று ஷூக்களில் உள்ள சகதியை துடைத்து சுத்தம் செய்தார். இவரின் இந்த செயலால் தான் நேற்று இந்திய வீரர்கள் எவ்வித பிரச்சினையும் இன்றி கேட்ச்-களை பிடித்தனர்.

யார் இந்த ராகவேந்திரா

யார் இந்த ராகவேந்திரா

ஆஸ்திரேலியாவில் இந்தியாவின் பேட்டிங் கலக்கி வருவதற்கு ரகு ராகவேந்திராவும் ஒரு காரணம். ஏனென்றால் பயிற்சியின் போது, ஆஸ்திரேலியாவின் வேகம் மற்றும் பவுன்ஸை வீரர்கள் பழகுவதற்கு ரகுவின் த்ரோடவுனே காரணம். தனது பணி மட்டுமின்றி வீரர்களின் ஷூக்களையும் சுத்தம் செய்துவிட்ட அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

அம்பயர் மீது குற்றச்சாட்டு

அம்பயர் மீது குற்றச்சாட்டு

மழையின் காரணமாக வங்கதேச அணியில் வழுக்கி விழும் சம்பவங்கள் அரங்கேறின. அந்த அணியின் பேட்ஸ்மேன் லிண்டன் தாஸ் 2 முறை வழுக்கி விழும் சூழலுக்கு சென்றார். மழை முழுவதுமாக நிற்பதற்கு முன்னதாகவே அம்பயர்கள் கவர்களை எடுத்துவிட்டதாக அந்த அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, November 3, 2022, 12:39 [IST]
Other articles published on Nov 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+