Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ருதுராஜ் கெய்க்வாட்டை திருமணம் செய்யும் மகாராஷ்டிரா கிரிக்கெட் வீராங்கனை.. யார் இந்த உட்கர்ஷா பவார்?

மும்பை: மகாராஷ்டிரா கிரிக்கெட் அணி வீராங்கனையான உட்கர்ஷா பவாரை இந்திய கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாய் திருமணம் செய்யவுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிஎஸ்கே அணியின் எதிர்கால கேப்டனாக பார்க்கப்பட்டு வரும் ருதுராஜ் கெய்க்வாட், இந்த ஐபிஎல் சீசனில் மட்டும் சுமார் 590 ரன்களை விளாசினார். சென்னை அணிக்காக சிறப்பாக ஆடிவரும் இவர், விரைவில் இந்திய அணியின் தொடக்க வீரராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரின் அதிரடியான ஆட்டத்தை சென்னை அணி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

Who is Utkarsha Pawar? CSK Player Ruturaj Gaikwad to Marry Maharashtra Cricket Player in a couple of days

ஐபிஎல் கோப்பையை வென்ற பின் சென்னை அணி வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த கொண்டாட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் காதலியான உட்கர்ஷா பவாரும் பங்கேற்றார். ருதுராஜ் கெய்க்வாட்-க்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், உட்கார்ஷா உடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் அவரே மணப்பென் என்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் இருவரும் சிஎஸ்கே கேப்டன் தோனியை சந்தித்தும் வாழ்த்து பெற்றனர்.

இந்த நிலையில் ருதுராஜ் கெய்க்வாட் காதலி உட்கர்ஷா பவாரும் கிரிக்கெட் வீராங்கனை என்பது தெரிய வந்துள்ளது. 11 வயது முதலே கிரிக்கெட் விளையாடி வரும் உட்கர்ஷா பவார், மகாராஷ்டிரா அணிக்காக ஏராளமான போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால் கடந்த 18 மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதில் இருந்து உட்கர்ஷா விலகி இருந்து வருகிறார்.

Who is Utkarsha Pawar? CSK Player Ruturaj Gaikwad to Marry Maharashtra Cricket Player in a couple of days

புனே பல்கலைக்கழகத்தில் ஃபிட்னெஸ் தொடர்பாக படித்து வருவதால் உட்கர்ஷா பவார் கிரிக்கெட்டில் இருந்து விலகியுள்ளார். இந்த நிலையில் ருதுராஜ் கெய்க்வாட் உடன் அவருக்கு திருமணம் நடக்கவுள்ளது. ஏற்கனவே திருமண கொண்டாட்டாங்கள் தொடங்கியுள்ள நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் கிரிக்கெட் வீராங்கனையையே திருமணம் செய்யவுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் இருவருக்கும் நாளை மறுநாள் திருமணம் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, June 1, 2023, 23:06 [IST]
Other articles published on Jun 1, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+