Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அது யாரு கோஹ்லி?: ட்வீட் போட்ட ஆஸி. பந்துவீச்சாளர் ஜம்பாவை வச்சு செஞ்ச ரசிகர்கள்

மும்பை: விராட் கோஹ்லி என்றால் யார்? என்று கேட்ட ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஆடம் ஜம்பாவை இந்திய ரசிகர்கள் ட்விட்டரில் கிண்டல் செய்துள்ளனர்.

ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஆடம் ஜம்பா. ஐபிஎல் போட்டிகளில் டோணி தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியில் உள்ளார். இந்நிலையில் புனே அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் இடையே நடந்த போட்டியில் அபாரமாக பேட்டிங் செய்த விராட் கோஹ்லி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோரின் புகைப்படத்தை கிரிக்கெட் வீரர் கேன் ரிச்சர்ட்சன் ட்விட்டரில் வெளியிட்டார்.

அந்த புகைப்படத்தை ஜம்பா ரீட்வீட் செய்தார்.

கோஹ்லியா?

ரிச்சர்ட்சனின் புகைப்படத்தை ரீட்வீட் செய்த ஜம்பா கையை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் அது யாரு கோஹ்லி, டிவில்லியர்ஸ்? என்று கேட்டிருந்தார். அதற்கு ரிச்சடர்சனோ இஷாந்த் சர்மாவிடம் கோஹ்லி யார் என கேளுங்கள் என பதில் அளித்தார்.

கிண்டல்

கிண்டல்

பிரபல கிரிக்கெட் வீரராக உள்ள கோஹ்லியை யார் என்று கேட்ட ஜம்பாவை மக்கள் ட்விட்டரில் கிண்டல் செய்யத் துவங்கினர். இதை பார்த்த ஜம்பா தனது ட்வீட்டை டிலீட் செய்துவிட்டார்.

இஷாந்த்

இஷாந்த்

ரிச்சர்ட்சன் ஏன் இஷாந்திடம் கேட்குமாறு கூறினார் என நினைக்கலாம். பெங்களூர் அணிக்கு எதிராக இஷாந்த் சர்மா பந்து வீசியபோது கோஹ்லியும், டிவில்லியர்ஸும் பிரித்து மேய்ந்துவிட்டனர். 4 ஓவர்களில் இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சில் அவர்கள் 47 ரன்கள் அடித்தனர்.

புனே அணி

புனே அணி

வரிசையாக தோல்விகளை சந்தித்து வந்த புனே அணி ஹைதராபாத் அணிக்கு எதிராக நேற்று விளையாடியது. அந்த போட்டியில் டோணி அணி ஹைதராபாத் அணியை தோற்கடித்துள்ளது.

Story first published: Wednesday, April 27, 2016, 13:29 [IST]
Other articles published on Apr 27, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+