Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தொடக்க வீரராக யாருக்கு இடம்.. கேஎல் ராகுல், சுப்மன் கில் இடையே கடும் போட்டி.. குழப்பத்தில் ரோகித்

அகமதாபாத் : இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 9ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான இந்திய அணியில் யாரை சேர்ப்பது? யாரை நீக்குவது என்ற குழப்பத்தில் உள்ளனர்.

இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சூர்யகுமார் விளையாடுவாரா இல்லை ரோகித் சுழற்பந்துவீச்சு ஆல் ரவுண்டர்களை வைத்து கொள்வாரா என்ற குழப்பம் எழுந்துள்ளது.

இதனிடையே, ரோகித் சர்மாவுக்கு தொடக்க வீரராக சுப்மன் கில் விளையாடுவாரா இல்லை கேஎல் ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கேஎல் ராகுல் ஃபார்ம்

கேஎல் ராகுல் ஃபார்ம்

இந்திய டெஸ்ட் அணியில் துணை கேப்டனாக கேஎல் ராகுல் இருப்பதால், அவருக்கு தான் முதல் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. கேஎல் ராகுல், கடைசியாக வங்கதேசத்துக்கு எதிராக விளையாடிய போது 22, மற்றும் 23 ரன்களும், 10 மற்றும் 2 ரன்களுமே அடித்தார். அதன் பிறகு விளையாடிய இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 39,64 மற்றும் 7 ரன்களை கேஎல் ராகுல் அடித்தார்.

ஆஸி.க்கு எதிராக ராகுல்

ஆஸி.க்கு எதிராக ராகுல்

தற்போது திருமணம் முடிந்த உடன் கேஎல் ராகுல் டெஸ்ட போட்டியில் தனது தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதுவரை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 9 டெஸ்டில் விளையாடி 580 ரன்கள் கேஎல் ராகுல் அடித்துள்ளார். இதில் 1 சதமும், 6 அரைசதமும் அடங்கும். இதில் சராசரி 38 ரன்கள் ஆகும்.

சுப்மன் கில் ஃபார்ம்

சுப்மன் கில் ஃபார்ம்

ஆனால் சுப்மன் கில்லை பொறுத்தவரை 2023ஆம் ஆண்டு வேற லெவலில் ரன்களை விளாசி இருக்கிறார். சுப்மன் கில் நடப்பாண்டில் 12 இன்னிங்சில் 769 ரன்களை விளாசி இருக்கிறார். தற்போது ஃபார்மை பொறுத்தவரை கில் தான் முதலிடத்தில் இருப்பதால், அவருக்கு தான் முன்னுரிமை வழங்கி இருக்க வேண்டும்.

நடுவரிசையில் இடம்

நடுவரிசையில் இடம்

ஆனால் கேஎல் ராகுல் தொடக்க வீரராக களமிறங்குவதால் சுப்மன் கில்லை ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதில் நடுவரிசையில் விளையாட வையுங்கள் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதனிடையே, இந்த விவகாரம் குறித்து பேசிய இர்பான் பதான் தொடக்க வீரராக கில்லுக்கு தான் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.

Story first published: Saturday, February 4, 2023, 12:24 [IST]
Other articles published on Feb 4, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+