Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒன்றல்ல... இரண்டல்ல.. 44 ஆண்டுகள்..!! தவம் கிடக்கும் இங்கிலாந்து.. கனவு நனவாகுமா?

Recommended Video

WORLD CUP 2019 ENG VS NZ FINALS | உலகக்கோப்பைக்காக தவம் கிடக்கும் இங்கிலாந்து அணி

லண்டன்: கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்து, இன்றைய பைனலில் வென்றாவது முதல் முறையாக உலக கோப்பையை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எழுந்துள்ளது.

லண்டன் லாட்ஸ் மைதானத்தில் நடைபெறும் ஐசிசி உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் பைனல் இன்று நடக்கிறது. அதில் போட்டியை நடத்தும் இங்கிலாந்தும், கடந்த ஆண்டு 2ம் இடம்பிடித்த நியூசிலாந்தும் களம் காண்கின்றன.

உலகத்துக்கே கிரிக்கெட் போட்டியை அறிமுகம் செய்த நாடு இங்கிலாந்து. ஆனால், அதன் கடந்த கால உலக கோப்பை சோகம், ஏமாற்றத்தை தாங்கியது. 1975-ம் ஆண்டில் இருந்து இதுவரை ஒருமுறை கூட பட்டத்தை அந்த அணி ருசித்தது இல்லை.

3 முறை பைனல்

3 முறை பைனல்

இத்தனைக்கும் 3 முறை உலக கோப்பை பைனலுக்கு முன்னேறி இருக்கிறது. அதுவும் தற்போது 27 ஆண்டுகளுக்குப்பின் இறுதிக்குள் நுழைந்திருக்கிறது. 44 ஆண்டுகால தவத்துக்கும், கிரிக்கெட்டை தாய்வீடு என்ற பெயர் பெற்ற அந்த அணி இன்று கோப்பையை கைப்பற்றும் என்று நம்புகிறது.

44 ஆண்டு போராட்டம்

44 ஆண்டு போராட்டம்

இங்கிலாந்தை போன்று நியூசிலாந்தும், கடந்த உலக கோப்பையை இதுவரை வென்றதில்லை. கடந்த முறை, தொடர்ந்து 2வது முறையாக நியூசிலாந்து இறுதிக்கு வந்திருக்கிறது. ஏறக்குறைய 44 ஆண்டுகளில் 2வது முறையாக கோப்பை அள்ளிச் செல்ல கிடைத்த அரிய வாய்ப்பு இது. உலக கோப்பையை வெல்லாத இரு அணிகள் 2வது முறையாக களம் காண்கின்றன.

டாஸ் முக்கிய அம்சம்

டாஸ் முக்கிய அம்சம்

இதுவரை உலக கோப்பையில் இரு அணிகளும் 9 முறை மோதி, நியூசி. 5 முறையும், இங்கிலாந்து 4 முறையும் வென்றுள்ளன. ஆனால், தற்போது இரு அணிகளும் வலுவாக இருக்கின்றன. இன்றைய ஆட்டத்தில் டாஸ் ரொம்ப முக்கியம்.

மைதானம் எப்படி?

மைதானம் எப்படி?

லார்ட்ஸ் மைதானம் வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு என இருதரப்புக்கும் ஏற்றார்போல் நடு நிலையுடன் அமைக்கப்பட்டுள்ளது. லீக் போட்டிகள், அரையிறுதி ஆகியவற்றில் டாஸ் வென்று பேட்டிங்கில் அதிக இலக்கு நிர்ணயித்து பவுலிங்கில் மிரட்டி வென்றிருக்கிறது இங்கிலாந்து. ஆனால், சேசிங்கில் படு மோசம்.

உலக கோப்பை கனவு

உலக கோப்பை கனவு

நியூசிலாந்தை பார்த்தோமானால் இன்று இல்லாவிட்டால் இனி என்றுமே இல்லை என்பது போல உலக கோப்பை கனவு. ஏன் என்றால் இந்த உலக கோப்பையில் அரையிறுதிக்கு வந்ததே ஏக அதிர்ஷ்டத்தில் தான் என்று கூறலாம். கடைசி நேரத்தில் ரன் ரேட்டில் 4வது அணியாக உள்ளே நுழைந்து, இந்தியாவை அரையிறுதியுடன் வீட்டுக்கு அனுப்பி இருக்கிறது.

பேட்டிங்கில் எப்படி?

பேட்டிங்கில் எப்படி?

ரன்ரேட்டில் அதிர்ஷ்டம், அரையிறுதியில் மழை அதிர்ஷ்டம் என எக்கச்சக்க வாய்ப்புகளுடன் பைனலுக்கு வந்திருக்கிறது. அந்த அணியின் பலம் பந்துவீச்சும், பீல்டிங் தான். பேட்டிங்கில் கேப்டன் வில்லியம்4ன், ராஸ் டெய்லர் ஆகியோர் தான் எல்லாமே. மற்றவர்களை அவ்வளவாக எதிர்பார்க்க முடியாத நிலையில் அந்த அணி இருக்கிறது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

பவுலிங்கில் போல்ட், நீஷம், ஹென்றி, பெர்குசன், கிராண்ட் ஹோம் என படையே அணி திரண்டிருக்கிறது. இன்று இல்லாவிட்டால் உலக கோப்பை இனி அந்த அணிகளுக்கு சாத்தியமே இல்லை என்பதால் பைனல் ஏக எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது.

Story first published: Sunday, July 14, 2019, 10:59 [IST]
Other articles published on Jul 14, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+