Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியின் அடுத்த கோச்.. ரவி சாஸ்திரிக்கு கபில் தேவ் வைக்கப் போகும் ட்விஸ்ட்? ஆவலுடன் ரசிகர்கள்!

Recommended Video

Ravi Shastri back to coach | ரவி சாஸ்திரியே இந்திய அணி பயிற்சியாளர்.. பிசிசிஐ அறிவிப்பு

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் தேர்வு முடிவு இன்று மாலை வெளியாக உள்ளது.

கபில் தேவ் தலைமையிலான குழு நேர்முகத் தேர்வு (அல்லது ஸ்கைப் மூலம்) நடத்தி, முடிவை அறிவிக்க இருக்கிறது.

ஆறு பேரின் பெயர்கள் இறுதிப் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. அதில் தற்போது தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரி தான் மீண்டும் தேர்வு செய்யப்படுவார் என பரவலாக கூறப்படுகிறது.

இன்று என்ன முடிவு?

இன்று என்ன முடிவு?

எனினும், கபில் தேவ் தலைமயிலான மூன்று நபர்கள் கொண்ட குழு எனன் முடிவு எடுக்கப் போகிறது என்பது இதுவரை தெரியவில்லை. அந்த குழுவில் இருக்கும் அன்ஷுமன் கெயிக்வாட் வெளிப்படையாகவே ரவி சாஸ்திரிக்கு தான் வாய்ப்பு அதிகம் என முன்பே பேட்டி கொடுத்தார். எனினும், சில முக்கிய பெயர்களும் பயிற்சியாளர் தேர்வுப் பட்டியலில் உள்ளது.

ஆறு பேர் யார்?

ஆறு பேர் யார்?

ரவி சாஸ்திரி தவிர்த்து, டாம் மூடி, மைக் ஹெஸ்ஸன், பில் சிம்மன்ஸ், ராபின் சிங், லால்சந்த் ராஜ்புத் ஆகியோர் தேர்வுப் பட்டியலில் உள்ளனர். இவர்களில் டாம் மூடி, மைக் ஹெஸ்ஸன் ஆகியோர் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளை அதன் உச்சத்துக்கு எடுத்துச் சென்றவர்கள்.

ரவி சாஸ்திரிக்கு வாய்ப்பு அதிகம்

ரவி சாஸ்திரிக்கு வாய்ப்பு அதிகம்

இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் விருப்பமாக ரவி சாஸ்திரி இருப்பதால் அவருக்குத் தான் வாய்ப்பு என கூறப்படுகிறது. பிசிசிஐ அதிகாரிகள் பலர் பெயர் குறிப்பிடாமல் இது குறித்து முன்பே பல முறை பேட்டி அளித்தும் விட்டனர்.

கபில் தேவ்

கபில் தேவ்

இது எல்லாவற்றையும் தாண்டி இந்த முடிவை மாற்றும் அதிகாரம் ஒருவருக்கு மட்டும் தான் உண்டு. அது கபில் தேவ் தான். தேர்வுக் குழுவின் முடிவில் பிசிசிஐ எந்த வகையிலும் தலையிடாது என்றும், கேப்டன் கோலியின் விருப்பத்தையும் கேட்கப் போவதில்லை என தேர்வுக் குழு அறிவித்துள்ளது.

ட்விஸ்ட் வைப்பாரா கபில் தேவ்?

ட்விஸ்ட் வைப்பாரா கபில் தேவ்?

அதனால், கபில் தேவ் நினைத்தால் மட்டுமே மாற்றம் நடக்கும். ரவி சாஸ்திரிக்கு மாற்றாக வேறு ஒருவரை தேர்வு செய்யலாம் என்றால் அது டாம் மூடி அல்லது மைக் ஹெஸ்ஸனாக மட்டுமே இருக்கும். கபில் தேவ் ட்விஸ்ட் வைப்பாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ரசிகர்களின் ஒரே நம்பிக்கை

ரசிகர்களின் ஒரே நம்பிக்கை

இந்திய கிரிக்கெட் ரசிகர்களில் பெரும்பாலானோர் ரவி சாஸ்திரி பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என கூறி வருகின்றனர். அதனால் கபில் தேவ் தங்கள் ஆசைக்கு ஏற்ப புதிய பயிற்சியாளரை கொண்டு வருவாரா? என்ற எதிர்பார்த்துள்ளனர்.

Story first published: Friday, August 16, 2019, 18:33 [IST]
Other articles published on Aug 16, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+