Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே வைஸ் கேப்டன் யாருன்னு தெரியும்.. ஆனா மும்பை, கொல்கத்தாவின் வைஸ் கேப்டன் யாருன்னு தெரியுமா?

சென்னை : 2019 ஐபிஎல் தொடரில் பங்கேற்க எட்டு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. எட்டு அணிகளின் கேப்டன்கள் யார் என்பது ஓரளவுக்கு ரசிகர்களுக்கு தெளிவாக தெரியும்.

ஆனால், துணை கேப்டன்களாக ஒவ்வொரு அணியிலும் எந்த வீரர் இடம் பெறுவார்? வாங்க பார்க்கலாம்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இந்த ஆண்டு கேன் வில்லியம்சன் அல்லது டேவிட் வார்னர் இருவரில் ஒருவர் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் இவர்களில் ஒருவர் தான் துணை கேப்டன் பதவியிலும் இருப்பார். எனினும், வில்லியம்சன் காயம் காரணமாக முதல் சில போட்டிகளில் ஆட முடியாத சூழலில் இருக்கிறார். எனவே, துணை கேப்டன் பதவியில் ஷகிப் அல் ஹசன் அல்லது ரஷித் கான் இடம் பெற அதிக வாய்ப்புள்ளது.

மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா தான் கேப்டன். துணை கேப்டன் யார்? லசித் மலிங்கா, கீரான் பொல்லார்டு, க்வின்டன் டி காக் என மூன்று அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். இவர்களில் லசித் மலிங்காவிற்கு தான் வாய்ப்பு அதிகம். ஆனால், மலிங்கா, பொல்லார்டு உள்ளிட்டோர் எல்லா போட்டிகளிலும் ஆடுவாரா என்பது சந்தேகமே. எனவே, க்வின்டன் டி காக் துணை கேப்டனாக அதிக வாய்ப்புள்ளது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

அஸ்வின் தலைமையில் களமிறங்கும் பஞ்சாப் அணிக்கு இந்திய அணி வீரர் ராகுல் தான் துணை கேப்டனாக வர அதிக வாய்ப்புள்ளது. கிறிஸ் கெயில், முகமது ஷமி ஆகியோருக்கும் வாய்ப்புள்ளது.

டெல்லி கேபிடல்ஸ்

டெல்லி கேபிடல்ஸ்

கடந்த ஆண்டு பாதியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் பதவி உயர்கு பெற்றார். ஐபிஎல் தொடரில் நிலையற்ற அணி என்றால் அது டெல்லி அணிதான். இந்த முறை பெயரை டெல்லி கேபிடல்ஸ் என மாற்றிக் கொண்டுள்ளது. ஸ்ரேயாஸ் ஐயருக்கு தோள் கொடுக்கப் போகும் துணை கேப்டன் யார்? தவான் அனேகமாக துணை கேப்டன் பதவியில் இடம் பெறலாம். அல்லது தவான் கேப்டனாகவும், ஸ்ரேயாஸ் ஐயர் துணை கேப்டனாக மாறவும் வாய்ப்புள்ளது.

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர்

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர்

பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி. துணை கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ் என்பது எழுதப்படாத விதி. இவர்கள் இருவரில் ஒருவர் பங்கேற்கவில்லை எனும் பட்சத்தில், பார்த்திவ் படேல் துணை கேப்டன் பதவி பெறுவார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா அணியில் அனுபவ வீரர்கள் பற்றாக்குறை அதிகம் எனும் நிலையில், ராபின் உத்தப்பா தான் அந்த அணியின் துணை கேப்டனாக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் தினேஷ் கார்த்திக் கேப்டன் பொறுப்பை ஏற்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் துணை கேப்டனாக ரஹானேவிற்கு தோள் கொடுக்க சரியான வீரர்கள். ஆனால், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் தொடரின் பாதியில் நாடு திரும்புவார்கள் என கூறப்படும் நிலையில், சஞ்சு சாம்சனுக்கு துணை கேப்டனாக அதிக வாய்ப்புள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ்-இல் துணை கேப்டன் பதவி எப்போதும் சின்ன தல என அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவுக்கு தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஒருவேளை ரெய்னா ஓய்வு எடுக்க வேண்டி வந்தால், பிராவோ துணை கேப்டனாக இருப்பார்.

Story first published: Monday, March 18, 2019, 19:01 [IST]
Other articles published on Mar 18, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+