தோனி என்ற பூனைக்கு மணி கட்டப்போவது யார்? கடும் விமர்சனம்.. பரபரப்பைக் கிளப்பிய முன்னாள் வீரர்!

Former Cricketer Sandeep Patil criticized Dhoni | Dhoni | Sandeep Patil

மும்பை : தோனி குறித்து கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார் முன்னாள் வீரரும், முன்னாள் தேர்வுக் குழு தலைவருமான சந்தீப் பாட்டில்.

தோனி கடந்த ஆறு மாதமாக இந்திய அணியில் எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில், தோனி என்ற பூனைக்கு மணி கட்டப் போவது யார்? என்ற கவலை தேர்வுக் குழுவிடம் இருப்பதாகவும், தோனி எதிர்காலம் குறித்த குழப்பத்தால் இந்திய கிரிக்கெட் பாதிக்கப்படுவதாகவும் சரமாரியாக விமர்சனத்தை முன் வைத்துள்ளார் சந்தீப் பாட்டில்.

வதந்தி

வதந்தி

தோனி 2019 உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு பெறுவார் என்ற வதந்தி நீண்ட காலமாக கூறப்பட்டு வந்தது. ஆனால், தோனி அப்படி எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.

சந்தேகம்

சந்தேகம்

உலகக்கோப்பை தொடருக்குப் பின் அவர் இந்திய அணியில் எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை. அவராக ஒதுங்கி இருப்பதாகவே கூறப்படுகிறது. எனினும், அவர் ஆட விருப்பம் தெரிவித்தாலும் இந்திய அணியில் சேர்க்கப்படுவாரா? என்ற சந்தேகம் உள்ளது.

தேர்வுக் குழு முடிவு

தேர்வுக் குழு முடிவு

இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழு, தோனியை தாண்டி இந்திய அணி நகர்ந்து விட்டதாக கூறி தங்கள் அதிரடி முடிவை ஏற்கனவே கூறி இருந்தனர். ரிஷப் பண்ட் தான் அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக இருக்கிறார்.

தோனியிடம் கேள்வி

தோனியிடம் கேள்வி

தோனி மீண்டும் இந்திய அணியில் இணைந்து கிரிக்கெட் ஆடுவாரா? என்ற கேள்வி ரசிகர்கள் இடையே உள்ளது. இது பற்றி சமீபத்தில் தோனியிடம் ஒரு நிகழ்ச்சியில் கேட்கப்பட்டது.

மர்மம்

மர்மம்

அப்போது பதில் அளித்த தோனி ஜனவரி மாதம் வரை எதுவும் கேட்காதீர்கள் என்றார். அதனால், தோனி மீண்டும் அணிக்கு திரும்புவாரா? என்பது மர்மமாகவே உள்ளது. இந்த நிலையில் தான் அது பற்றி சந்தீப் பாட்டில் பரபரப்பான கருத்துக்களை கூறி இருக்கிறார்.

பூனைக்கு மணி?

பூனைக்கு மணி?

"மகேந்திர சிங் தோனி என்ற பூனைக்கு மணி கட்டப் போவது யார்? என்ற கவலை தேர்வுக் குழுவினர் இடையே தொடர்ந்து இருக்கிறது. தோனி மற்றும் தேர்வுக் குழுவினர் தான் தங்கள் திட்டத்தை சொல்ல வேண்டிய கடமையில் இருக்கிறார்கள்" என்றார் சந்தீப் பாட்டில்.

இந்திய கிரிக்கெட் பாதிப்பு

இந்திய கிரிக்கெட் பாதிப்பு

மேலும், "மகேந்திர சிங் தோனியின் வருகைக்காக இந்திய கிரிக்கெட் பாதிக்கப்படுவதை நாம் விரும்பவில்லை. என் மனதில் தோனி தான் சிறந்த விக்கெட் கீப்பருக்கான தேர்வு என்பது உள்ளது" என்ற சந்தீப் பாட்டில் மேலும் ஒரு விஷயத்தை கூறி உள்ளார்.

பெரிய கவலை

பெரிய கவலை

"ஆனால், சர்வதேச அரங்கில் நீடிக்க ஒருவர் தொடர்ந்து தரமான கிரிக்கெட் ஆட வேண்டும். தோனியின் விஷயத்தில் அது தான் பெரிய கவலை" என கடுமையாக தன் கருத்தை கூறி இருக்கிறார்.

அமைதி

அமைதி

தோனி அமைதியாக இருப்பதும், பிசிசிஐ தலைவர் கங்குலி, கேப்டன் விராட் கோலி உள்ளிட்டோர் தோனி விஷயத்தில் மௌனம் காப்பதும் தான் தோனி மீண்டும் அணிக்கு திரும்புவது குறித்த விவாதங்களை கிளப்பி வருகிறது.

ஜனவரி மாதம் பதில்?

ஜனவரி மாதம் பதில்?

தோனி தான் கூறியது போல ஜனவரி மாதம் தன் எதிர்கால திட்டம் பற்றி பேசுவாரா? என்ற எதிர்பார்ப்பு மட்டுமே ரசிகர்களை அமைதி அடையச் செய்துள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Who will bell the cat called Mahendra Singh Dhoni? - A sharp criticism from the former player Sandeep Patil.
Story first published: Wednesday, January 8, 2020, 21:38 [IST]
Other articles published on Jan 8, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X