நியூசிக்கு எதிரான முதல் டி20 போட்டி.. பிரித்வி ஷாவுக்கு இடம் கிடைக்குமா? தொடக்க வீரர்கள் யார்?
ராஞ்சி : இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாளை வெள்ளிக்கிழமை ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தொடர்ந்து 6 ஒருநாள் போட்டியில் விளையாடிய பிறகு தற்போது டி20 தொடரில் மீண்டும் களமிறங்குகிறது.
இதில் இந்திய அணியில் நீண்ட நாட்களுக்கு பிறகு அதிரடி வீரர் பிரித்வி ஷா சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் தற்போது அவருக்கு அணியில் களமிறங்க வாய்ப்பு கிடைக்குமா என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
தொடக்க வீரரும், விக்கெட் கீப்பருமான இஷான் கிஷன் கடந்த சில போட்டிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இஷான் கிஷன்
எரிமலை எப்படி வெடித்துவிட்டுபிறகு உறங்க சென்றுவிடுமோ, அதே போல் வங்கதேசத்திற்கு எதிராக இரட்டை சதம் அடித்துவிட்டு பிறகு இஷான் கிஷன் அமைதியாகிவிட்டார். இருப்பினும் அவர் டிராவிட்டின் செல்ல பிள்ளை என்பதால் அவருக்கு தான் வாய்ப்பு கிடைக்கும். சுப்மான் கில் சிறப்பான பார்மில் இருக்கிறார்.

சுப்மான் கில்
நியூசிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் உள்ளிட்ட 360 ரன்களை அவர் குவித்துள்ளார். இதனால் அவருக்கு டி20 போட்டியில் வாய்ப்பு வழங்க ஹர்திக் யோசிக்க மாட்டார். ஆனால், தொடர்ந்து விளையாடி வருவதால், அவருக்கு ஓய்வு கிடைக்கும் பட்சத்தில் அடுத்த தொடக்க வீரர் குறித்து அணி யோசிக்கும்.

ருத்துராஜ்
அணியில் இருந்த மற்றொரு தொடக்க வீரரான ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் பந்தயத்திலிருந்து விலகி உள்ளார். இதே போன்று மற்றொரு தொடக்க வீரரான ராகுல் திரிபாதிக்கு தற்போது பேட்டிங் வரிசையில் 3வது இடத்தில் விளையாட வாயப்பு வழங்கப்படுவதால், பிரித்வி ஷா மட்டும் தான் பந்தயத்தில் இருக்கிறார்.

பிரித்வி ஷா
பிரித்வி ஷா கடைசியாக விளையாடிய ரஞ்சி போட்டியில் முச்சதம் அடித்து செம பார்மில் இருக்கிறார். இதனால் சுப்மன் கில்லுக்கு ஓய்வு வழங்கப்பட்டால், நிச்சயம் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. பிரித்வி ஷா கடைசியாக 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25ஆம் தேதி இலங்கைக்கு எதிராக டி20 போட்டியில் கடைசியாக இந்தியாவுக்கு எதிராக விளையாடினார்.


Click it and Unblock the Notifications