Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாருக்கு பதிலாக களமிறங்குவார் ஸ்டோக்ஸ்?

Recommended Video

யாருக்கு பதிலாக களமிறங்குவார் ஸ்டோக்ஸ்?- வீடியோ

லண்டன்: பிரிஸ்டல் நைட் கிளப் வழக்கில் குற்றமற்றவர் என்று ஸ்டோக்ஸ் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம் பெறுவார் என்று அறிவித்தது.

ஆனால் தற்போது இங்கிலாந்து கேப்டன் மற்றும் பயிற்சியாளருக்கு யாருக்கு பதிலாக ஸ்டோக்சை களமிறக்குவது என்பது மிகவும் சவாலான ஒன்றாகும். அதனை பற்றிய சிறு தொகுப்பு

Who will give their spot to Stokes


கிறிஸ் வோக்ஸ்:

ஸ்டோக்சுக்கு பதிலாக நேரடியாக களமிறக்கப்பட்டவர் கிறிஸ் வோக்ஸ். அவர் இரண்டாவது போட்டியில் தனது முதல் சதத்தை அடித்ததோடு மட்டுமல்லாமல் 4 விக்கெட்களையும் எடுத்தார். அதனால் அவரை நீக்குவது சரியான முடிவாக இருக்காது.

சாம் கர்ரன்:

இங்கிலாந்து அணியின் புதிய வரவு. முதல் போட்டியில் இவரின் ஆட்டம் மூலமே இங்கிலாந்து வெற்றி பெற்றது. சிறந்த ஆல் ரௌண்டர். இவரை நீக்குவதும் சரியான முடிவாக இருக்காது.

அடில் ரஷீத்:

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் எதுவுமே செய்யாமல் வெற்றிகான அணியில் இருந்த ஒருவர் ரஷீத் மட்டுமே. ஆனால் அணியில் இருக்கும் பிரதான ஸ்பின்னர் இவர் மட்டுமே.அதனால் இவரை நீக்குவது குறித்து பல முறை யோசித்த பின்னரே முடிவெடுக்க முடியும்.

கேட்டான் ஜென்னிங்ஸ்:

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர். இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சரிவர சோபிக்க முடியாத வீரர். இவரை நீக்கினால் தொடக்க வீரராக யாரை களமிறக்குவது என்பதில் குழப்பம் வரலாம். ஆனால் தற்போதைய அணியில் இவரை நீக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஒல்லி போப்:

இந்திய அணிக்கெதிரான இரண்டாவது போட்டியில் அறிமுகம் ஆனவர். முதல் போட்டியில் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் ஆடியவர். இவருக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்றே தெரிகிறது.

எதுவாக இருப்பினும் ஸ்டோக்சின் வரவு இங்கிலாந்து அணிக்கு மேலும் பலத்தை கூட்டும் என்பது உறுதி.









Story first published: Friday, August 17, 2018, 8:16 [IST]
Other articles published on Aug 17, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+