
ஹர்சல் பட்டேல்
இந்த நிலையில் ஆர்ஸ்தீப் சிங் பதிலாக இன்றைய ஆட்டத்தில் யார் பங்கேற்பார் என்று தற்போது பார்க்கலாம். ஹர்சல் பட்டேலுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும். ஹர்சல் பட்டேல் முதல் டி20 ஆட்டத்தில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி 41 ரன்கள் கொடுத்தார். ஆனால் அது ரன் குவிப்பிற்கு சாதகமான மைதானம் என்பதால் கொஞ்சம் கூடுதல் ரன்கள் அவருடைய ஓவரில் சென்றது. எனினும் இரண்டு முக்கிய விக்கெட்களை அவர் வீழ்த்தினார். ஹர்சல் பட்டேலுக்கு ஏதேனும் காயம் ஏற்படாத நிலையில் இன்றைய ஆட்டத்தில் முதல் வாய்ப்பு அவருக்கு தான்.

முகேஷ் குமார்
அதேபோன்று முகேஷ் குமாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 29 வயதான முகேஷ் குமார் உள்ளூர் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். பந்தை நன்றாக ஸ்விங் செய்யக்கூடியவர். டி20 யில் வாய்ப்பு கிடைத்தால் தன்னுடைய திறமையை வெளிப்படுத்துவார். சிவம் மவி போன்ற இளம் வீரருக்கு ஹர்திக் பாண்டியா வாய்ப்பு கொடுத்ததால் முகேஷ் குமாருக்கும் இன்றைய ஆட்டத்தில் அவர் வாய்ப்பு தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முகேஷ் குமார் ஐபிஎல் மினி ஏலத்தில் 5.5 கோடி ரூபாய்க்கு போனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாஷிங்டன் சுந்தர்
இதேபோன்று மூன்றாவது வீரராக தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் விளையாட அதிக வாய்ப்பு உள்ளது. வாஷிங்டன் சுந்தர் பேட்டிங்கிலும் அதிரடியாக விளையாட கூடியவர் என்பதால் , இந்தியாவுக்கு அது கூடுதல் சாதகமாக இருக்கும். ராஜ்கோட் மைதானம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் ஹர்திக் பாண்டியா, சிவம்மவி ,உம்ரான் மாலிக் என மூன்று வேக பந்துவீச்சாளர்களை வைத்துக்கொண்டு வாஷிங்டன் சுந்தரை கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம்.

ராகுல் திருப்பாதி
கடந்த ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தவறிய ராகுல் திருப்பாதிக்கு இன்று போட்டியில் இரண்டாவது வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இதை போன்று தொடக்க வீரர் சுப்மான் கில்லுக்கு பதிலாக ருத்துராஜ் கெய்க்வாட் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.தொடரை தீர்மானிக்கக் கூடிய ஆட்டம் என்பதால் இன்றைய ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா பெரிய ரிஸ்க் எடுக்காமல் இருக்க வேண்டும் என்பதே ரசிகர்கள் எதிர்பார்ப்பு.


Click it and Unblock the Notifications











