Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நியூசிக்கு எதிரான டி20 தொடர்.. அக்சர் பட்டேல் இடத்தில் யார்? 3 வீரர்களுக்கு இடையே போட்டி

ராஞ்சி : நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் டி20 போட்டியில் இந்திய அணியில் அக்சர் பட்டேல் இடம்பெறாத நிலையில், அவருக்கு பதில் யார் இடம்பெறுவார் என்று தற்போது பார்க்கலாம்.

டி20 போட்டியில் இந்திய அணி எப்போதுமே ஒரு சுழற்பந்துவீச்சாளர் மற்றும் ஒரு ஆல் ரவுண்டர் என்ற காம்பினேஷன்களிலேயே களமிறங்கும்.

ஜடேஜா இல்லாத தருணத்தில், அந்த பணியை அக்சர் பட்டேல் சிறப்பாக செய்தார். தற்போது அவருக்கு திருமணம் என்பதால், 3 வீரர்களுக்கு இடையே அவருடைய இடத்தை நிரப்ப கடும் போட்டி நிலவுகிறது.

தீபக் ஹூடா

தீபக் ஹூடா

இந்திய அணியின் திறமை வாய்ந்த ஆல்ரவுண்டராக விளங்குபவர் தீபக் ஹூடா, கடந்த ஆண்டு தீபக் ஹூடா தமக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி கலக்கினார். அயர்லாந்துக்கு எதிராக சதம் எல்லாம் அடித்ததன் மட்டுமல்லாமல் பந்துவீச்சில் ரன்களை கட்டுப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். ஆனால் காயத்திற்கு பிறகு திரும்பியுள்ளதால் அவரால் பெரிய ஆட்டத்தை அதன் பிறகு ஏற்படுத்த முடியவில்லை. எனினும் நியுசிலாந்து தொடரில் அவருக்கு நல்ல வாய்ப்பாக அமையும்.

வாசிங்டன் சுந்தர்

வாசிங்டன் சுந்தர்

இந்த பந்தயத்தில் 2வது இடம் பிடிப்பவர் வாசிங்டன் சுந்தர். பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கலக்கும் ஆல்ரவுண்டராக வாசிங்டன் சுந்தர் அறியப்படுகிறார். ஆனால் பேட்டிங்கில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் அக்சர் பட்டேல் இடத்தை பிடிக்க இவருக்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

குல்தீப் யாதவ்

குல்தீப் யாதவ்

இந்த பட்டியலில் 3வத இடத்தை பிடித்திருப்பவர் குல்தீப் யாதவ். டி20 கிரிக்கெட்டில் குல்தீப் யாதவை விட சாஹல் தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார். இதனால், குல்தீப் யாதவ்க்கு தான் அணியில் இடம் கிடைக்க வாய்ப்பை இல்லை. இந்த நிலையில் அக்சர் பட்டேல் இல்லாத நிலையில், குல்தீப் யாதவை பயன்படுத்த ஹர்திக் பாண்டியா முயற்சிக்கலாம்.

குழப்பம்

குழப்பம்

ஹர்திக் பாண்டியா எப்போதும் பந்துவீச்சு தெரிந்த பேட்ஸ்மேன் அணிக்கு தேவை என்ற வெளிப்படையாகவே கூறிவிட்டார். இதனால் அவர் பிளேயிங் லெவனில் தீபக் ஹூடா மற்றும் வாசிங்டர் சுந்தர் என இரண்டு வீரர்களையுமே சேர்ப்பார். அப்படி இருக்கும் பட்சத்தில் குல்தீப்பா அல்லது சாஹலா என்று நிலை வரும். இல்லை 2 ஸ்பின்னர்களும் தேவை என அவர் முடிவு எடுத்துவிட்டால் வாசிங்டன் சுந்தரா அல்லது தீபக் ஹுடாவா என்று முடிவு வரும்.

Story first published: Thursday, January 26, 2023, 19:03 [IST]
Other articles published on Jan 26, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+