மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது பல அதிரடி மாற்றங்கள் நிகழ வாய்ப்பு இருக்கிறது. இந்திய அணி தொடர்ந்து பத்து ஆண்டுகளாக ஐசிசி கோப்பையை வெல்லவில்லை.
மேலும் தற்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தலைமையில் ஆசிய கோப்பை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், டி20 உலக கோப்பை என மூன்று தொடரிலும் இந்திய அணி படுதோல்வியை தழுவியது.

இதனால் டிராவிட்டை மாற்ற பிசிசிஐ யோசித்து வருகிறது. இந்த நிலையில் டிராவிட்டுக்கு பதிலாக இந்திய அணியின் பயிற்சியாளராக வர தகுதியுள்ள மூன்று நபர்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பவர் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பிளமிங். ஸ்டீபன் பிளமிங் சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளராக 2009 ஆம் ஆண்டு பதவியேற்றுக்கொண்டார்.
12 ஆண்டுகளாக சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த பிளமிங் ஐந்து கோப்பைகளையும் பலமுறை இறுதிப் போட்டிக்கு வந்த பெருமையையும் பெற்றுக் கொடுத்திருக்கிறார். இதனால் பிளம்மிங் இன் வருகை இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமையலாம். எனினும் பிளம்மிங் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் எந்த அணியின் பயிற்சியாளராகவும் செயல்பட்டது இல்லை

இந்த நிலையில் இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் முன்னாள் இந்திய அணி வேகபந்துவீச்சாளர் அசிஸ் நெஹ்ரா. குஜராத் அணி தொடக்க சீசனிலேயே கோப்பையை வென்றதற்கு முக்கிய காரணம் நெஹ்ரா தான். ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது இளம் இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து. அவர்களை ஐபிஎல் தொடரில் சாதிக்க வைத்தது என ஆசிஷ் நெஹ்ரா பயிற்சியாளராக பட்டையை கிளப்பி இருக்கிறார்.இந்த நிலையில் ஆர்சிபி அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்து சிராஜ் போன்ற வீரர்களின் வளர்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளார்.

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே. ஜெயவர்த்தனே தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை வென்றிருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணியின் பலத்திற்கு ஜெயவர்த்தனே ஒரு காரணமாக இருந்திருக்கிறார். ஜெயவர்த்தனேவின் கேப்டன்ஷிப் அனுபவம் பயிற்சியாளர் அனுபவம் என இரண்டுமே இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும்.