Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கஷ்டப்படும் முக்கிய வீரர்.. குழம்பிய பிசிசிஐ.. ஒரே ஒரு வீரரால் இந்திய அணிக்குள் ஏற்பட்ட பரபரப்பு!

சென்னை: இந்திய அணியின் மிக முக்கியமான வீரர் ஒருவர் காயம் காரணமாக விலகி உள்ளதால் அணி தேர்வில் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் முடிந்துள்ள நிலையில் தற்போது இங்கிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்ள உள்ளது. இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளது.

ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி தற்போது இங்கிலாந்தை காலி செய்யும் முனைப்பில் உள்ளது. இரண்டு அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டி சென்னையில் நடக்க உள்ளது.

குழப்பம்

குழப்பம்

இந்த நிலையில் இந்திய அணியின் மிக முக்கியமான வீரர் ஒருவர் காயம் காரணமாக விலகி உள்ளதால் அணி தேர்வில் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்திய அணியில் தற்போது மிக முக்கியமான ஆல் ரவுண்டராக இருப்பவர் ஜடேஜா. இவர் ஒருநாள் போட்டிகள் தொடங்கி டெஸ்ட் போட்டிகள் வரை அனைத்திலும் சிறப்பாக ஆடி வருகிறார்.

சிறப்பான ஆட்டம்

சிறப்பான ஆட்டம்

அதிலும் கடந்த 2-3 வருடங்களாக இந்திய அணியில் அனைத்து பார்மெட்டிலும் ஜடேஜாதான் தற்போது பினிஷராக திகழ்ந்து வருகிறார். பவுலிங், பேட்டிங் இரண்டிலும் உச்சபட்ச பார்மில் ஜடேஜா வலம் வந்து கொண்டு இருக்கிறார். தற்போது பாண்டியா இந்திய அணியில் பேட்டிங் மட்டுமே செய்கிறார், பவுலிங் செய்வது இல்லை.

பவுலிங்

பவுலிங்

இதனால் ஜடேஜாவின் தேவை இந்திய அணியில் அதிகம் ஆகியுள்ளது. இந்தநிலையில் தற்போது ஜடேஜா காயம் காரணமாக ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இருந்து விலகி உள்ளார். கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இவர் டெஸ்ட் தொடரில் ஆடவில்லை. இதனால் இந்திய அணி சிக்கலுக்கு உள்ளாகி உள்ளது.

குழப்பம்

குழப்பம்

இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜடேஜாவின் இடத்தை பிடிக்க போகும் வீரர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது. ஜடேஜா அளவிற்கு இந்திய அணியில் ஆல் ரவுண்டர் ஆட்டத்தை செய்ய போகும் வீரர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது. பாண்டியா பவுலிங் செய்ததால் இவரை களமிறக்க முடியாது.

வேறு யார்

வேறு யார்

இதனால் வாஷிங்க்டன் சுந்தர், ஷரத்துல் தாக்கூர், அக்சர் பட்டேல் இடையே போட்டி நிலவுகிறது. அக்சர் பட்டேல் 4வருடமாக இந்திய அணியில் ஆடவில்லை. சுந்தர் இளம் வீரர். தாக்கூர் ஸ்பின் பவுலிங் செய்ய மாட்டார் என்பதால் யாரை ஜடேஜாவின் இடத்தில் இறக்கலாம் என்ற கடுமையான குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Story first published: Tuesday, February 2, 2021, 14:58 [IST]
Other articles published on Feb 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+