Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறந்த வீரர் விருது யாருக்கு கிடைக்கும்?

துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் இந்தியா, வங்கதேசம் மோத உள்ளன. இந்த நிலையில், இந்த தொடரின் சிறந்த வீரர் விருதை யார் வெல்வார்?

இந்த தொடரில் இதுவரை பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் நன்றாக செயல்பட்ட நான்கு வீரர்களில் ஒருவர் தான் வெல்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டியின் செயல்பாடுகளையும் சேர்த்து இதில் ஒருவர் வெல்லலாம் என நாம் கணிக்கலாம்.

வங்கதேசத்தின் முஷ்பிகுர் ரஹீம்

வங்கதேசத்தின் முஷ்பிகுர் ரஹீம்

வங்கதேச பேட்ஸ்மேனான இவர் 4 போட்டிகளில் 297 ரன்கள் குவித்துள்ளார். 1 சதம், 1 அரைசதம் அடித்துள்ளார். முக்கியமான பாகிஸ்தான் போட்டியில் 99 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

ஆப்கனின் ரஷித் கான்

ஆப்கனின் ரஷித் கான்

ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் 5 போட்டிகளில் 10 விக்கெட்கள் வீழ்த்தியதோடு, இந்த தொடரில் 3.72 ரன்கள் எகானமி வைத்துள்ளார். சிறந்த சுழல் பந்துவீச்சாளரான ரஷித் கானுக்கு சிறந்த வீரர் விருது கிடைக்க சிறிது வாய்ப்புள்ளது. எனினும், இன்றைய போட்டியில் இந்திய, வங்கதேச வீரர்கள் எடுக்கும் விக்கெட்டை பொறுத்துதான் இது அமையும்.

முஸ்தாபிசூர் ரஹ்மான்

முஸ்தாபிசூர் ரஹ்மான்

ரஹ்மான் 4 போட்டிகளில் 8 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். இன்றைய போட்டியில் இவர் அதிக விக்கெட்கள் வீழ்த்தினால், அதிக விக்கெட்கள் பட்டியலில் ரஷித் கானை முந்திவிடுவார். அதே சமயம், இந்தியாவின் பும்ரா 3 போட்டிகளில் 7 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். அவருக்கும் சிறந்த வீரர் விருதுக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது.

சூப்பர் பேட்ஸ்மேன் ஷிகர் தவான்

சூப்பர் பேட்ஸ்மேன் ஷிகர் தவான்

ஆசிய கோப்பை தொடரில் தவான் 4 போட்டிகளில் 327 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 81.75 வைத்துள்ளார். இவருக்கே சிறந்த வீரர் விருது கிடைக்க அதிகபட்ச வாய்ப்பு உள்ளது. காரணம் 2 சதம் அடித்துள்ளார். இந்த தொடரில் அதிக சதம் அடித்தவர் இவரே. இவருக்கு போட்டியாக இருப்பவர்கள், ரஹீம் மற்றும் ரோஹித் சர்மா தான். ரோஹித் 269 ரன்கள் எடுத்துள்ளார்.

Story first published: Friday, September 28, 2018, 14:53 [IST]
Other articles published on Sep 28, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+