who won the yesterday Match: மார்க் வுட் அபார பந்துவீச்சு.. டெல்லியை பந்தாடிய லக்னோ!
லக்னோ : ஐபிஎல் 2023ஆம் ஆண்டு சீசனில் டெல்லி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் லக்னோ அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ர டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் ராகுல் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து மெயர்ஸ் 14 ரனகள் எடுத்திருந்த போது டெல்லி அணி வீரர் கலீல் அகமது சுலபமான கேட்ச் ஒன்றை தவறவிட்டார்.
இதனையடுத்து தமக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட மெயர்ஸ், டெல்லி பந்துவீச்சை மைதானத்தின் நான்கு பக்கமும் சிதறடித்தார்.தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் 38 பந்துகளில் 73 ரன்களை விளாசினார்.

தீபக் ஹூடா 17 ரன்களிலும் , குர்னல் பாண்டியா 15 ரன்களிலும், மார்கஸ் ஸ்டோனிஸ் 12 ரன்களிலும் ஆட்டமிழக்க, நிக்கோல பூரானும் தன் பங்கிற்கு 3 சிக்சர்கள் விளாசி 21 பந்துகளில் 36 ரன்கள் எடுத்துள்ளார். இறுதியில் ஆயுஷ் பதோனி 7 பந்துகளில் 18 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 சிக்சர்களும், ஒரு பவுண்டரியும் அடங்கும். அவர் ஆட்டமிழந்த நிலையில், கடைசி ஒரு பந்துக்காக உள்ளே இம்பாக்ட் வீரராக வந்த கிருஷ்ணப்பா கௌதம் சிக்சர் அடித்தார். இதனால் 20 ஓவர் டிவில் லக்னோ 193 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்தது.

194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில் பிரித்வி ஷா 12 ரன்களில் ஆட்டமிழக்க, மிட்செல் மார்ஷ் டக் அவுட்டாகியும், சர்பிராஸ் கான் 4 ரன்களிலும் வெளியேற, கேப்டன் வார்னர் மட்டும் நிலைத்து விளையாடி அரைசதம் கடந்தார். லக்னோ அணியின் மார்க் வுட் வேகத்தை டெல்லி வீரர்களால் எதிர்கொள்ள முடியாமல் பெவிலியன் நோக்கி அணிவகுப்பு நடத்தினர் ரூசோவ் 30 ரன்கள் சேர்க்க, 20 ஓவர் முடிவில் டெல்லியால் 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. பேட்டிங், பந்துவீச்சு என பலத்துடன் இருக்கும் லக்னோவை தான் வரும் 3ஆம் தேதி சிஎஸ்கே அணி எதிர்கொள்ள போகிறத என்பது குறிப்பிடத்தக்கது


Click it and Unblock the Notifications