
தோனியின் செல்லப்பிள்ளை
தமிழக வீரர் அஸ்வின், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய பிறகு தான் அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் வாய்ப்பே கிடைத்தது. 2015ஆம் ஆண்டு வரை சிஎஸ்கேக்கு விளையாடிய அஸ்வின், 2017ஆம் ஆண்டுக்கு பிறகு தான் சென்னை அணியை விட்டு பிரிந்தார். சென்னைக்கு தடை விதிக்கப்பட்ட காலத்தில் கூட புனே அணியில் தோனியுடன் விளையாடினார் அஸ்வின்.

உறவில் விரிசல்
தோனி இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக இருந்த வரை ,அவரை புகழ்ந்து பேசிய அஸ்வின், பிறகு விராட் கோலி கேப்டனாக மாறியதும் அணி மாறியதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த தோனி, அஸ்வினை மீண்டும் சிஎஸ்கேவில் எடுக்க வேண்டாம் என கூறிவிட்டதாக தெரிகிறது. தோனியின் இந்த முடிவால் அஸ்வின் பெரும் ஏமாற்றம் அடைந்தார்.

கருத்து வேறுபாடு
ஒரு பேட்டியில் கூட சிஎஸ்கே பயிற்சியாளர் ஃபிளமிங்கிற்கும் அஸ்வினுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறியிருந்தார். ஒரு போட்டியில் அதிக ரன்கள் விட்டு கொடுத்ததால், சிஎஸ்கே நிர்வாகம் தமக்கு முழு ஆதரவு தரவில்லை என்றும் அந்த பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில், ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பும் சிஎஸ்கே அணியில் தோனிக்கு கீழ் விளையாட வேண்டும் என்று விரும்புவதாக அஸ்வின் தூது விட்டார்.

கடுப்பான அஸ்வின்
ஆனால் அப்போதும் சிஎஸ்கே நிர்வாகம் மெகா ஏலத்தில் அஸ்வினை எடுக்க ஆர்வம் காட்டவில்லை. அந்த கோபத்தை மனதில் வைத்து கொண்ட தான் நேற்று சிஎஸ்கேக்கு எதிராக விக்கெட் எடுக்கும் போதும், ரன்கள் அடித்து வெற்றி பெற்ற போதும் அஸ்வின் வெறித்தனமாக கொண்டாடினார். தமிழக வீரரே தமிழக அணிக்கு எதிராக திரும்பியதை யார் தான் நினைத்து பார்த்து இருப்பார்கள்.


Click it and Unblock the Notifications