ஆலோசனை கூட கேட்கவில்லை.. களத்திலேயே தமிழக வீரரை ஓரம்கட்டிய ரஹானே.. திடீர்ன்னு என்னாச்சு?
சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இன்று அஸ்வினுக்கு பெரிய அளவில் பவுலிங் செய்ய வாய்ப்பு வழங்கப்படவில்லை.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தற்போது இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. ரோஹித் சர்மா மற்றும் சுப்மான் கில் நிதானமாக பேட்டிங் செய்து வருகிறார்கள்.
இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 337 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 131 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்மித் ரன் அவுட் ஆனார்.

விக்கெட்
நேற்று ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல்நாள் போட்டியில் அஸ்வின் நிறைய ஓவர்களை வீசினார். நேற்று போட்டியின் கடைசி கட்டத்தில்தான் சைனி மற்றும் ஜடேஜா பவுலிங் செய்தனர். அஸ்வினுக்கு நேற்று 13வது ஓவரில் இருந்தே பவுலிங் செய்யும் வாய்ப்பு கிட்டியது.

எப்படி
ஆனால் இன்று அஸ்வினுக்கு பெரிய அளவில் ஓவர் போடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஜடேஜாவிற்குத்தான் இன்று ரானே பெரும்பாலான ஓவர்களை கொடுத்தார். ஸ்பின் பவுலிங்கிற்கு ஏதுவாக பிட்ச் இருந்தும் கூட அஸ்வினுக்கு ரஹானே ஓவர் கொடுக்கவில்லை.

ஓவர் சிக்கல்
இன்றைய பிட்ச் வேகமான ஸ்பின் பவுலிங்கிற்கு ஏதுவாக இருந்தது. இதன் காரணமாக அஸ்வினுக்கு பதிலாக ஜடேஜாவை ரஹானே அதிகம் பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் அஸ்வினிடம் ரஹானே ஆலோசனை கூட இன்று கேட்கவில்லை . இன்று வீரர்களுடன் அஸ்வின் பெரிய அளவில் கலந்து ஆலோசிக்கவில்லை.

என்னாச்சு
தொடக்கத்தில் மட்டும் சிலர் ஓவர் போட்ட அஸ்வின் அதன்பின் வீசவில்லை. அஸ்வினை இப்படி திடீரென ரஹானே ஓரம்கட்டியது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது. அஸ்வினுக்கு ஓய்வு தேவை, அவரிடம் ரிதம் இல்லை என்ற காரணங்களால் அவருக்கு ஓவர் கொடுப்படவில்லை, அவருக்கு இந்த ஓய்வு அவசியம் என்றும் கூறுகிறார்கள்... ஆனால் இதற்கான உண்மையான காரணமும் இன்னும் தெரியவில்லை.


Click it and Unblock the Notifications