Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வின் 3வது இடத்தில் பேட்டிங் செய்வது ஏன்? லொள்ளு பிடிச்ச ஆளுங்க ரோகித்.. காரணமே வேறு

நாக்பூர் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 177 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.

ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பேட்டிங்கிற்கு பெரும் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இல்லை என்பதை ஸ்மித் , லாபஸ்சேன் ஜோடி ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு புரிய வைத்தது.

ஏனென்றால் மூன்றாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 82 ரன்கள் சேர்த்தது. இது குறித்து உண்மையை ஒப்புக்கொண்ட மேத்தீவ் ஹைடன், பீச் பார்ப்பதற்கு பயங்கரமாக பந்து திரும்பும் என்று எதிர்பார்த்தோம்.

ரோகித் அதிரடி

ரோகித் அதிரடி

ஆனால் அந்த அளவிற்கு பேட்டிங் செய்ய ஆபத்தான ஆடுகளமாக இது இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இதே ஆடுகளத்தில் இந்தியா விளையாடும் போது ரோகித் சர்மா அதிரடியாக ரன் குவித்து அசத்தினார். முதல் ஓவரிலே அவர் 12 ரன்கள் அடித்து ஆஸ்திரேலிய ஊடகங்களுக்கு பதிலடி கொடுத்தார். 66 பந்துகளை எதிர்கொண்டு ரோகித் சர்மா அரைசதம் அடித்தார். இதில் எட்டு பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும்.

அஸ்வின் ஏன்?

அஸ்வின் ஏன்?

இந்த நிலையில் கே எல் ராகுல் மட்டும் வழக்கம் போல் 20 ரன்களில் வெளியேறினார். இந்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிய ஐந்து பந்துகள் இருந்த நிலையில் அஸ்வின் பேட்டிங் செய்ய களத்துக்கு வந்தார். இது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்திருக்கலாம். காரணம் ஆடுகளம் பெரிய அளவில் ஆபத்தாக இல்லாத நிலையில் புஜாராவே களத்திற்கு வந்திருக்கலாம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால் பந்துகள் குறைவாக இருக்கும் போது இது போன்ற நைட் வாட்ச்மேனை ஒவ்வொரு அணியும் பயன்படுத்துவது என்பது இயல்பானது தான்.

ரோகித் பதிலடி

ரோகித் பதிலடி

ஆனால் ரோகித் சர்மா, சிராஜ் ,சமி போன்ற வீரர்களை களம் இறக்காமல் அஸ்வினை ஏன் நைட் வாட்ச்மேன் ஆக பயன்படுத்தினார் என்று கிரிக்கெட் விமர்சனங்களும் கேள்வி எழுப்பினர். ஆனால் அதற்கு காரணமே வேறு என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இல்லை. இந்தியா ஆடுகளத்தில் மோசடி செய்து விட்டது என்று ஆஸ்திரேலியா ஊடகங்கள் கூறிவரும் நிலையில், அஸ்வினை பேட்டிங் வரிசையில் மூன்றாவதாக களம் இறக்குவதன் மூலம் அந்த குற்றச்சாட்டுகளை தவிடுபொடியாக்கும் முயற்சியே இது என்று கூறப்படுகிறது.

இனி குறை சொல்லமாட்டாங்க

இனி குறை சொல்லமாட்டாங்க

எங்களுடைய பந்துவீச்சு ஆல் ரவுண்டர் கூட இந்த ஆடுகளத்தில் அடிப்பார் என்பதை ஆஸ்திரேலியாவுக்கு தெரியப்படுத்தும் விதமாகத்தான் ரோஹித் சர்மா இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. அஸ்வின் நன்றாக பேட்டிங் செய்து ஒரு அரை சதம் அடித்தால் கூட ஆஸ்திரேலியா ஊடகங்கள் இனி ஆடுகளத்தில் குறை இருப்பதாக பேசவே முடியாது என்பதற்காக ரோஹித் சர்மா வைத்த செக்மெட் தான் இது என்று இந்திய கிரிக்கெட் அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலக்கணப்படி தவறு

இலக்கணப்படி தவறு

கிரிக்கெட் இலக்கணப்படி இது தவறான முடிவாக தான் பார்க்கப்படும். ஏனென்றால் அஸ்வின் நன்றாக பேட்டிங் செய்யக் கூடியவர். ஒருவேளை இந்திய அணி தடுமாறினாலும் இறுதியில் அஸ்வின் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை அடிப்பார். ஆனால் இந்திய அணி தங்களுடைய பேட்டிங் திறமையை வெளிக்காட்ட தான் அஸ்வினை களமிறக்கி இருக்கிறார்கள்.

Story first published: Friday, February 10, 2023, 10:27 [IST]
Other articles published on Feb 10, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+