Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவர விட்டுட்டு… இவரை தேர்ந்தெடுத்த ஆஸி..!! தானே தலையில் மண்ணை வாரி போட்டுக் கொண்ட வினோதம்

லண்டன்:இந்தியாவுக்கு எதிரான முக்கிய போட்டியில், ஜேசன் பெரண்டார்ப்பை ஆஸ்திரேலியா ஏன் எடுக்கவில்லை என்று கேள்வி தற்போது எழுந்திருக்கிறது. அவர் இல்லாதது, ஆஸி.க்கு பெரிய சிக்கல் என்றும் கூறப்படுகிறது.

உலக கோப்பை தொடரின் 14வது போட்டி இன்று ஓவல் மைதானத்தில் பலத்த எதிர் பார்ப்புடன் துவங்கியது. போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் மோதுகின்றன.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். மேலும் இந்த போட்டியில் இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். அதேபோன்று ஆஸ்திரேலிய அணியிடம் எந்த மாற்றமும் இல்லை என்று ஆஸ்திரேலிய கேப்டன் தெரிவித்தார். மேலும் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்ததற்கான காரணத்தையும் கோலி தெரிவித்தார்.

மாற்றமில்லாத அணி

மாற்றமில்லாத அணி

போட்டியில் இந்திய அணி மாற்றமின்றி களம் இறங்கி உள்ள நிலையில் ஆஸி. அணியும் வீரர்களில் மாற்றம் இல்லை என்று கூறினார். அவரின் இந்த பதிலால் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். ஏன் என்றால் பெரிதும் எதிர் பார்க்கப் பட்ட ஜேசன் பெரண்டார்ப் ஆஸி. அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார். அவருக்கு பதிலாக கூல்டர் நைல் தான் களம் இறங்கி இருக்கிறார்.

ஆஸி. ரசிகர்கள் கோபம்

ஆஸி. ரசிகர்கள் கோபம்

ஆஸி. அணி ரசிகர்களின் கோபத்துக்கு காரணம் இல்லாமல் இல்லை. ஏன் என்றால்... இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை சரிவுக்கு உள்ளாக்கும் திறமையை கொண்டவர். அதாவது... இந்திய பேட்ஸ்மென்களுக்கு ஒரு தடுமாற்றம் இருக்கிறது. இடது கை வேகப் பந்துவீச்சாளர்களின் பந்துகளை எதிர்கொள்வதில் இன்னும் திணறி வருகின்றனர்.

தவான் 12 முறை அவுட்

தவான் 12 முறை அவுட்

அதற்கான புள்ளி விவரங்களும் அதை தான் சொல்கின்றன. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால்... உதாரணமாக, 2015 உலகக் கோப்பைக்குப் பிறகு, இடது கை வேகப்பந்துவீச்சாளர்களிடம் தவான் 12 முறை ஆட்டமிழந்துள்ளார். அவரது சராசரி 34.4 ஆகும். தல தோனி 9 முறை இடது கை பந்துவீச்சாளர்களால் அவுட்டாகி இருக்கிறார். அவரது சராசரி 24.77.

இடது பவுலிங், தடுமாற்றம்

இடது பவுலிங், தடுமாற்றம்

பின்வரிசை மட்டுமல்ல.... தொடக்க வீரர்களின் புள்ளி விவரங்களும் அப்படித் தான் இருக்கின்றன. ரோகித், கேப்டன் கோலி உள்ளிட்டவர்களும் இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் தடுமாறுகின்றனர். அதனால் கூல்டர்நைலுக்குப் பதில் பெரண்டார்ப் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

ஆஸி.க்கு பின்னடைவு

ஆஸி.க்கு பின்னடைவு

இது நிச்சயம் ஆஸி.க்கு பின்னடைவு தான் என்று ரசிகர்கள் செம கடுப்பில் இருக்கின்றனர். போட்டியில் தொடக்க வீரர்களாக ரோகித், தவான் ஜோடி ஆஸி. பந்து வீச்சை அதகளம் பண்ணியிருக்கிறது. முதல் விக்கெட்டுக்கு எளிதாக 100 ரன்களை கடந்திருக்கிறது.

இது தவறு

இது தவறு

அது தவிர, கூல்டர் நைல் தான்... ரோகித்தின் கேட்சை கோட்டை விட்டவர். முதல் 20 ஓவர்களில் அவர் வீசிய 4 ஓவர்களில் 31 ரன்களை வாரி வழங்கி இருக்கிறார். அதிலும், 8-வது ஓவரின் 2,3,4 ஆகிய பந்துகளில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்திருக்கிறார் தவான். ஆக... கூல்டர் நைல் தேர்வு தவறு.... என்று ஆஸி. அணி நிர்வாகம் உணரும் என்று அந்நாட்டு ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர்.

Story first published: Sunday, June 9, 2019, 17:20 [IST]
Other articles published on Jun 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+