"நடராஜன் இருக்கட்டும்".. எல்லோரும் இருக்கும் போது.. ஏன் இப்படி சொல்லணும்.. பிசிசிஐ பரபர முடிவு!
சிட்னி: இந்திய அணியில் ஏற்கனவே மாற்று வீரர்கள் இருக்கும் போது கூடுதலாக நடராஜன் உட்பட 3 மாற்று வீரர்களை அறிவித்தது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் ஆட இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது. டெஸ்ட் போட்டிகள் இந்த வாரம் 17ம் தேதி தொடங்க உள்ளது.
இதற்கான பயிற்சி ஆட்டங்கள் தற்போது நடந்து வருகிறது. இந்த நிலையில் நடராஜன், ஷர்த்துல் தாக்கூர், வாஷிங்க்டன் சுந்தர் மூன்று பேரும் ஆஸ்திரேலியாவில் இருக்கட்டும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

நாடு திரும்பி உள்ளனர்
முக்கியமான வீரர்கள் நாடு திரும்பி உள்ள நிலையில், நடராஜன், ஷர்த்துல், வாஷிங்க்டன் சுந்தர் மூவர் மட்டும் ஆஸ்திரேலியாவிலேயே உள்ளனர். டெஸ்ட் அணியில் வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் மாற்று வீரர்களாக விளையாடுவதற்காக இவர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இவர் தற்போது நெட் பயிற்சியில் பவுலிங் செய்ய உள்ளனர்.

கேள்வி
இந்த நிலையில்தான் இந்திய அணியில் ஏற்கனவே மாற்று வீரர்கள் இருக்கும் போது கூடுதலாக நடராஜன் உட்பட 3 மாற்று வீரர்களை அறிவித்தது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது. ஆம் இந்திய அணியில் இந்த தொடரில் பவுலிங் செய்ய சமி , பும்ரா, சிராஜ் ஆகியோர் உள்ளனர். இவர்கள்தான் இந்திய அணியின் பவுலிங் தேர்வாக இருப்பார்கள்.

காயம்
இவர்கள் யாருக்காவது காயம் ஏற்பட்டால் மாற்று வீரர்களாக களமிறங்க உமேஷ் யாதவ், சைனி இருக்கிறார். ஆனாலும் கூட தற்போது மாற்று வீரர்களாக நடராஜன், ஷரத்துல் ஆகிய இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர். அஸ்வின், குல்தீப் இரண்டு ஸ்பின் பவுலர்களில் ஒருவர் காயம் அடைந்தால்.. அவர்களுக்கு மாற்றாக வாஷிங்க்டன் சுந்தர் களமிறங்குவார்.

ஆனால் சிக்கல்
ஆனால் ஏற்கனவே ஸ்பீட் பவுலர்கள் நிறைய பேர் இருக்கும் போது கூடுதலாக மேலும் இரண்டு ஸ்பீட் பவுலர்களை பிசிசிஐ தேர்வு செய்தது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது. இதில் நவ்தீப் சைனி , உமேஷ் யாதவ் மீது கோலி பெரிய அளவில் நம்பிக்கை வைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

வாய்ப்பு
இவர்கள் டெஸ்ட் போட்டிகளில் சொதப்ப வாய்ப்புள்ளது என்று கோலி நினைக்கிறார். இதனால்தான் நவ்தீப் சைனிக்கு ஒருநாள் போட்டியில் 2 போட்டிக்கு பின் வாய்ப்பு வழங்கபடவில்லை. இதன் காரணமாகவே நடராஜன் போன்ற வீரர்களை பிசிசிஐ ஆஸ்திரேலியாவிலேயே இருக்க கூறியுள்ளது என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications